Headlines

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு!




வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (௦1) கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், திலீபன், மாகாண ஆளுனர்களான திருமதி சார்ள்ஸ், மஹிபால ஹேரத், அநுராதா யகம்பத் மற்றும் அமைச்சின் செயலாளரான கமல் குணரட்ன உட்பட பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.