ACMC News
ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கிண்ணியா நகர சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!
முஸ்லிம் தலைமைகளின் கைதுகள், சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் அடக்குமுறையே ஆகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார். ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, கிண்ணியா நகர சபையின் இன்றைய (28) சபை அமர்வில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமின் தலைமையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம் இடம்பெற்றதுடன் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் கைதுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கொரோனா மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யாது, தகனம் செய்வது…
“அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீதின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது” – தவிசாளர் அமீர் அலி!
அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட மருதூர் ஏ. மஜீத் அவர்களின் இழப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். மருதூர் ஏ. மஜீத் அவர்கள் கல்வித்துறையில் இலக்கியத் துறையில், கலைத்துறையில் என்று பல்கலை விற்பன்னராகத் திகழ்ந்தவர். எனக்கு மிகவும் பிரியமான ஒரு பேச்சாளர். அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் எவ்வளவு நேரம் அவருடன் உரையாடினாலும் அலுப்பு ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு திறமை மிக்க பெரியவரை நாம்…
“பன்முக ஆளுமை மணிப்புலவரின் மறைவு கவலை தருகின்றது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்!
பன்னூலாசிரியரும் சிறந்த இலக்கிய ஆய்வாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்களின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறந்த மேடைப் பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞருமான இவர், இலக்கிய உலகிற்கு எண்ணற்ற பங்களிப்புக்களை நல்கியவர். வெறுமனே எழுத்துலகில் மாத்திரம் அன்னார் ஈடுபாடு காட்டியவரல்லர். பன்முக ஆளுமை படைத்த மணிப்புலவர் நாட்டாரியலில் செய்தளித்திருக்கும் ஆய்வுகள் காலத்தால் அழிக்க முடியாதவை மாத்திரமின்றி, எதிர்கால சந்ததிக்கு சிறந்த இலக்கியப் பதிவுகளாகவும்…
ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, இன்று காலை (23) கொழும்பு, பொரளை, பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும்…
“இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்” – கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி!
இலங்கையில் பிறந்து, வளர்ந்த ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மரணித்த உடலுக்கான இறுதிக் கடமைகளை அதன் உறவினர்கள் விரும்புகின்றவாறே நிறைவேற்றுவது, அவர்களது அடிப்படை உரிமை ஆகும். ஆனால், தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கின்ற உடலங்களை எரித்தேயாக வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்நிலையில், மரணிக்கின்ற தங்களது உறவுகளின் உடலங்களை எரிக்காமல்,…
மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 2021- ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்த உறுப்பினர்கள் – 21 ஆதரவு – 10 உறுப்பினர்கள் எதிராக – 9 உறுப்பினர்கள் மு.கா உறுப்பினர் ஒருவர் நடுநிலைமை ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
‘திடீர் கைதுகள் ஒருவகை சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன” – கிண்ணியா நகர சபை உறுப்பினர் மஹ்தி!
திடீர் கைதுகள் ஒருவகை சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப்பை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று (15) அதிகாலை கிண்ணியாவில் வைத்து திடீரென கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் எமது கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்களுக்கும் கூட ஒருவகை பீதி ஏற்பட்டுள்ளதாக மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதி கொள்கைபரப்புச் செயலாளரும், கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே…
பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுடனான ஒன்றுகூடல்!
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபின் ஏற்பாட்டில், பொத்துவில் பிரதேச செயலாளர், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம நிலதாரிகள் உடனான ஒன்றுகூடலொன்று நேற்று (14) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அரசின் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் நாட்டின் பல்வேறு துறைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில், குறித்த திட்டத்தின் ஊடாக பொத்துவிலின் சுற்றுலாத்துறை மற்றும் தனிநபர் வாழ்வாதாரம் போன்றவற்றின் அபிவிருத்தி தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரின் எண்ணக்கருவின் கீழ் திட்டமிடப்பட்ட பொத்துவிலின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை நோக்காகக் கொண்ட திட்டவரைபுகள்…
ரிஷாட் பதியுதீன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வாக்குமூலம் அப்பட்டமான பொய் – ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலமானது போலியானது எனவும், அவற்றை பாராளுமன்ற உறுப்பினர் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மஹிந்த திஸாநாயக்கவுக்கு தனது சேவையாளரான பதியுதீன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை எனவும் அவருடன் எந்தவொரு உரையாடல்களையும் நடத்தவில்லை…
“கொரோனா உயிரிழப்பு வலியை விடவும், உடல்களை எரிப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் வலியாக உள்ளது” – முஷாரப் எம்.பி!
இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர். அத்துடன் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் நியமிக்கப்ட்டுள்ள நிபுணர்குழு உலக சுகாதார ஸ்தாபனத்திலுள்ள நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்களா கேட்கிறேன் என அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (30) திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு…
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான கொழும்பு வடக்கின் ரந்திய உயன, மெத்சந்த செவன மற்றும் மிஜய செவன தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸ் இன்று (29) வழங்கி வைத்தார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் “பாயிஸ் பவுன்டேஷன்” ஏற்பாட்டில், கொழும்பு வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் 2018 ஆம் ஆண்டு பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அறபா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொருட்கள் இன்று (26) வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினர் முத்து முஹம்மத் மற்றும் நகரசபை உறுப்பினர் பாரி ஆகியோரினால் குறித்த கற்றல் உபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
