ACMC News
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொட்டறாமுல்லையில்..!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, கொட்டறாமுல்லை பிரதேசத்தில் இன்று (29) நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
“அறுவைக்காட்டு பிரச்சினைக்கு ஜனாதிபதி நல்ல தீர்வைப் பெற்றுத் தருவாரென பெரிதும் நம்புகின்றோம்” – பாராளுமன்றில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!
இடைக்கால கணக்கறிக்கையினை பிரதமர் நேற்று இந்த சபையில் சமர்ப்பித்ததன் பின்னர், இன்றைய தினத்தில் நான் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் தடைப்பட்டுள்ள நிலையில், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டமும் இதற்குள் உள்ளடங்கியுள்ளது என்பதை இந்த சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (28) உரையாற்றிய அவர் கூறியதாவது, புத்தளம் மாவட்டம்…
முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; – மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் (26) கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட…
நிந்தவூர் பிரதேச சபையில் விடைபெற்ற மூன்று உறுப்பினர்கள்!
நிந்தவூர் பிரதேச சபையின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் கட்சியினதும் நிந்தவூர் மத்திய குழுவினதும் தீர்மானத்திற்கமைவாக, முன்மாதிரியான முறையில், ஏனைய வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில், தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்து விடைபெற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், ஏ.றிபானா ஆகிய மூவருமே, நேற்று (25) நடைபெற்ற சபை அமர்வின் போது, தமது இராஜினாமா குறித்த தகவலைத் தெரிவித்து, சக உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர். தமது…
“சிறுபான்மை சமூக விவகாரங்களில் அரசு மென்போக்கை கடைபிடிக்க வேண்டும்” – அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது கடும்போக்குத் தன்மையினை…
“ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசு தொடர்ந்தும் விடாப்பிடி” – முல்லைத்தீவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!
ஜனாஸா எரிப்பு விடயத்தில், அரசாங்கம் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து வருவதாகவும் இது தொடர்பிலான கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, வைத்தியர்களின் மேல் பழியைப் போட்டுவிட்டு வாளாவிருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல், மதக்கடமைகளை இல்லாமலாக்கவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு, முல்லைத்தீவில் நேற்று (24) நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,…
மன்னார் மறைமாவட்ட ஆயர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!
மன்னார் மறைமாவட்ட ஆயர் மரியாதைக்குரிய இம்மானுவல் பெர்ணாண்டோ அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர், இன்று மாலை (23) ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த, மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, இன்று (23) மன்னார், தாராபுரத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்ததனாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள…
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து புத்தளத்தில் வாகனப் பேரணி..!
கடந்த 33 வருடங்களாக, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளத்தில் மாபெரும் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்து, வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்று…
வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு வவுனியாவில்..!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு வாக்களித்த, வவுனியா மாவட்ட மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு, வவுனியாவில் இன்று (22) நடைபெற்றது. குறித்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
“ ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தாடல், சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது” – நாடாளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
மன்னர் காலம்தொட்டு மதிக்கப்பட்டு வந்த ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்தனி கலாசாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசின் செயற்பாடுகளும் கொள்கை அமுலாக்கல்களும் அமைய வேண்டுமென அவர் மேலும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “…
