Headlines

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து பதவியை காத்துக் கொள்ளுங்கள்: ஜோன் அமரதுங்க




அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்து கொள்ளுமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 15 மில்லியன் ரூபாவை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிந்தித்தாவது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கை உயர்ந்துங்கள்.

வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டாம். கையை உயர்த்துங்கள். அப்படி உயர்த்தினால் தான் உறுப்பினர் பதவியையும் பாதுகாத்து கொள்ள முடியும். இல்லையென்றால் அதுவும் இல்லாமல் போய்விடும் என ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *