Headlines

யார் முன்னிலையிலும் அரசாங்கம் மண்டியிடாது

நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமானது யார் முன்னிலையும் மண்டியிடாது. எனினும், சகலருக்கும் காது கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சாதாரண கோரிக்கைகளை யாராவது முன்வைத்தால், அவற்றுக்கு அரசாங்கம் காதுகொடுக்கும்.  எனினும், கண்டித்தோ அல்லது பயமுறுத்தியோ…

Read More

அமெரிக்கா சென்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் அறிக்கையை கோரும் பிரதமர்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல்அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர்களின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்ற விதம் தொடர்பான அறிக்கையினையும்பிரதமர் பாராளுமன்ற அலுவலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்க சுற்றுலாவில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசியம் என்ன என்றும், அவர்கள் அமெரிக்காவில்முன்னெடுத்த அரசியல் விவகாரங்களையும் குறித்த அறிக்கையில் உள்ளடக்குமாறுபிரதமர் கோரியுள்ளார்.

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை  கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது . அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

Read More

ஐ.தே.க.வுக்கு 70 ஆண்டுகள் பூர்த்தி!

ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு…

Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 70 ஆண்டுகள்!

1946ம் ஆண்டு செப்டம்பர் 06ம் திகதி முன்னாள் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார். அன்றைய அரசியல் மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் சிங்கள மகா சபை என்பன இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தன. இலங்கை தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய சேனநாயக்க தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் நிலைத்திருக்க, சிங்கள மகாசபையின் தலைவர் பண்டாரநாயக்க பின்னாளில் இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கியிருந்தார். இந்நிலையில்…

Read More

ஐ.தே.க தனித்து போட்டியிடும் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சி அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கட்சி மட்ட பேச்சுவார்த்தைகளே தற்போது மேற்கொள்ளப்படுவதாக அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பில் எந்தவொரு தீர்மனங்களோ பேச்சுவார்த்தைகளோ கட்சிகள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளே எனவும் தெரிவித்தார். உலக வர்த்தக…

Read More

மஸ்கெலியாவில் பிரதமர் ரணில்

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள்ளும் நிகழ்வு 28.08.2016 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டார். இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.கவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.  அட்டன் விஜிதா திரையரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஐhங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

ஐ.தே.க 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு: வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என…

Read More

ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை…

Read More

‘எமக்கு பயமில்லை’

-வி.நிரோஷினி ‘நிர்ணயிக்கப்படும் திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. நாம் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படவில்லை. கடந்த தேர்தல்களில் தைரியமாக முகங்கொடுத்து, வெற்றியீட்டிய எமக்கு, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி இலகுவாகவே அமையும்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read More

ஐ.தே.க.வுடன் இணைய திகாம்பரம் இணக்கம்

-ஆர்.ரமேஸ் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே  இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…

Read More