அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டம்.. டாக்டர்.ஹஸ்மியா பங்கேற்பு!
-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, இறக்காமம், மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் கடந்த சனிக்கிழமை (13) அன்று இடம்பெற்றன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டார். சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட் ஆகியோர் உட்பட…
