Headlines

தேர்தல் காரியாலயத் திறப்பு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!





-ஊடகப்பிரிவு-

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் நாஸரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா அண்மையில் (09) வட்டாரக் குழுத் தலைவர் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதேவேளை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தேர்தலில்  மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் புர்கானின் காரியாலய திறப்பு விழாவும் வட்டாரக் குழுத் தலைவர் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

பிரதி அமைச்சர் அமீர் அலி, முன்னாள் தவிசாளரும் மீராவோடை கிழக்கு வட்டார வேட்பாளர் ஹமீட் , சாட்டோ இணையத்தளத்தின் பணிப்பாளர் மன்சூர், வைத்தியர்.அப்தாம் அலி மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *