Headlines

“மு.காவில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்கள்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- மு ஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அக்கட்சியில் மீதமாக இருந்தவர்களும் தற்போது இரட்டைக் கொடியில் போட்டியிடுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைகளுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மீறாவோடையில்  (21)  இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

சீனி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரு பில்லியன் ரூபாய் வரை நட்டத்தைப் பதிவு செய்திருந்த சீனி நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டியதுடன், கடந்த 2017ஆம் ஆண்டில் இதனை 1.1 பில்லியன் ரூபாய் வரை…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலையில் 4200 பேருக்கு வேலை வாய்ப்பு… பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு!

-முர்ஷித் கல்குடா- எதிர்வரும் வருடங்களில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.ரி.எம்.புர்கானின் காரியாலயத்தை மிராவோடை மேற்கிலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-…

Read More

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது!

-ஊடகப்பிரிவு- உரிமைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்று கூறி பாராளுமன்றம் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் இந்த மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக செயற்படுகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சரின் இணைப்பு செயலாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லா இப்படிப்பட்டவர்களினால் மன்னார் நகர சபைக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் கடலுக்குள் போடுவதற்கு சமமானது என்றும் கூறினார். மன்னார் நகர சபைக்கு ஜக்கிய தேசிய கட்சி சார்பில் பெற்றா மற்றும் பெரியக்கடை வேட்பாளராக…

Read More

‘பணத்திற்காக தங்களுடைய உரிமைகளை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- பணத்திற்காக தங்களுடைய உரிமையை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் ஐ.ரி.அஸ்மியின் காரியாலயத்தை ஓட்டமாவடி, 2ஆம்  வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கல்முனை விஜயம்!

 -ஊடகப்பிரிவு- கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், கல்முனை பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். மு.காவின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஜவாத், மொளவி ஹனீபா மதனி ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் அமைச்சருடன் உடனிருந்தனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று தமது அன்பினையும், ஆதரவினையும்…

Read More

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஏழு விளையாட்டுக்கழகங்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஆதரிக்கத் தீர்மானம்!  

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மயில் சின்னத்தின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக பட்டியடிப்பிட்டி, அக்கரைப்பற்று பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக்கழகங்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கூட்டம் கடந்த புதன்கிழமை (17) பட்டியப்பிட்டியில் அமைந்துள்ள பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது. குறித்த தீர்மானமானது, இந்த சமூகத்திற்கான விடிவுக்கு ஆதரவாக அமையப்பெறுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் விடிவும், மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சினைகளை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்ற இந்த அரசியல் கூட்டமைப்பினாலே தீர்க்க முடியும்…

Read More

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சுவார்த்தை!

-ஊடகப்பிரிவு- கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம், மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. இவ்வாசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்துக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, பாலமுனையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். அன்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை  (20) இடம்பெற்றது. இதன்போதே, இந்த…

Read More

“முஸ்லிம் சமூகம் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றெடுப்பது காலத்தின் தேவை” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம்- மர்ஹூம் அஷ்ரப் பெற்றுத் தந்த பேரம் பேசும் சக்தியை இழந்து தவிக்கும் நமது சமூகத்துக்கு மீண்டும், வாக்குப்பலத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இடம்பெற்றபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியாதாவது, பெருந்தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம்…

Read More

வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில், வவுனியா நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை (22) பட்டானிச்சூரில் இடம்பெற்றக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அத்துடன்,  வவுனியா பாவற்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலும் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.        

Read More

இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மீதான நெறிமுறைகளை பின்பற்ற நுகர்வோர் விவகார அதிகார சபை இணக்கம்!

-ஊடகப்பிரிவு- வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி ஐ.நா வின் நுகர்வோர் பாதுகாப்பின் இலங்கையின் இரண்டு தலைமை நிறுவனங்களின் கூட்டு பங்காளரான ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் ஐ.நாவின் நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஷாங்கிரி லா ஹோட்டலில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக…

Read More

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்… மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு!

  -ஊடகப்பிரிவு-   கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் ப‌தியுதீன் சூறாவ‌ளி தேர்தல் பிர‌ச்சார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். அம்பாறை மாவட்டத்தில் ம‌ருத‌முனை முத‌ல் பொத்துவில், இற‌க்காம‌ம், அட்டாளைச்சேனை, கல்முனை, நிந்தவூர், சென்றல் கேம்ப், அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, மீராவோடை, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி வ‌ரையான‌ அனைத்து பிர‌தேச‌ங்க‌ளுக்கும் சென்று வேட்பாள‌ர்க‌ளையும், வாக்காள‌ர்க‌ளையும் சந்தித்ததுடன் ப‌ல‌ மேடைகளையும்…

Read More