‘கல்முனை மாநகரசபை தேர்தல் முடிவுகள் முஸ்லிம் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ வேட்பாளர் ஏ.எம்.றியாஸ்!
-ஊடகப்பிரிவு- கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் முடிவுகளில் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது என்று வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் பெஸ்டர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 12 ஆம் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொடர் ஏமாற்றத்தினால் செல்வாக்கு இழந்து போயுள்ள துரோகிகளின் கட்சியால் திட்டமிட்டு விரிக்கப்பட்டுள்ள சதி வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டிய…
