Headlines

’”பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’” -வவுனியாவில் அமைச்சர் றிஷாட்.

தமிழ்ச் சகோதரர்கள் மத்தியிலும் சிங்களச் சகோதரர்கள் மத்தியிலும் நமது  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின்  பிரதிநிதியான என்னைப்பற்றியும் பரப்பப் பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது   இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப  செய்யும் அரிய முயற்சி என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடாத்திய மூன்று நாள் கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மாலை (15/07/2018) நடைபெற்ற போது  பிரதம அதிதியாக  அவர் கலந்து கொண்டார்…

Read More

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்….

“யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சுய தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான உதவித் திட்டங்கள், கடனுதவி வழங்கல், மற்றும் தையல் பயிற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கல் ஆகிய தொடர்பில் கைத்தொழில் வர்த்தக அமைச்சு அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ள அங்குரார்ப்பண விழா பற்றிய உயர்மட்டக்கூட்டம் இன்று (16) காலை யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும்…

Read More

நல்லாட்சி அரசின் 1000 குளங்கள் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாழைச்சேனை கள்ளிச்சை குளம் புனரமைப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி!!!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சின் வழிகாட்டலில் நாட்டில் ஆயிரம் குளங்கள் புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குளங்கள் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம்  நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவின் கீழ் உள்ள கள்ளிச்சை குளத்தினை புணரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. வாழைச்சேனை கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும்…

Read More

இலங்கையின் சுதேச மருத்துவத்திற்கு சர்வதேச சட்டப்பாதுகாப்பு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!!!

இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து, புலமைசார் சொத்துக்களின் உதவியுடன் எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவ முறையை அறிமுகம் செய்வதற்காக கடந்த 5வருடங்களாக வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு இன்று காலை (13) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் ஆயுர்வேத எக்ஸ்போ – –  2018  கண்காட்சியில்…

Read More

அம்பாறை மக்களுக்கு அரசியல் அதிகாரம்!!! 

அம்பாறை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்கள்  அதிகமாக வாழும் ஒரு மாவட்டம் அந்த மாவட்டமே இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பாக இருக்கின்றது  அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையை நிர்ணயம் செய்கின்ற ஒரு மக்கள் சக்தியாகவும் இருக்கின்றது  பல வலுவான சக்திகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில்  கடந்த 08/07/2018 ம் திகதி இலங்கை மக்களும் இலங்கை அரசியல்வாதிகளும்  ஆச்சரியம் அடைந்த  நிகழ்வாக அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட  நிகழ்வுகள் இருந்தது அப்படி என்ன ஆச்சரியம் ? இது வரை…

Read More

தேர்தலில் தோற்கும் குதிரைக்கு பந்தயம் கட்வோரே அதிகம். பிரதியமைச்சர் அமீர் அலி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் பல இடங்களில் இருக்கின்றார்கள் என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாலையடிவெட்டை – நெல்லிக்காடு பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நெல்லிக்காடு தையல் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு…

Read More

தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கையை ஒன்றிணைக்க பரிந்துரைக்கிறோம்! – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

ஊடகப்பிரிவு – ‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது‘ என  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீன்    தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர்  துங்–லாய் மார்கு க்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இச்சந்திப்பில்…

Read More

நிந்தவூரில், வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

நிந்தவூரில் சுயாதீனமாகச் செயற்பட்டுவரும் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கான 500 மாதிரி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களது சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 08.07.2018 அன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் அரசியடி வட்டாரத்தில் இடம் பெற்றது. கடந்த தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்த…

Read More

பொத்துவிலில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு

அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் வரிய மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 08.07.2017அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

Read More

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் ரிசாத்

  நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அழைப்பிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாடசாலைக்கு கடந்த 08.07.2018 அன்று விஜயம் செய்தார். இதன்போது பாடசாலையின் முகப்பு, நுழைவாயில் மற்றும் மூன்றுமாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பது தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஜாபீர் மற்றும் பழைய மாணவர்களோடு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபையின் குழுக்களின் தலைவர் எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவிப்பு!!!

மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவித்தார். கற்பிட்டி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (10) சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் விஷேட உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆஷிக், அதுதொடர்பில் மகஜர் ஒன்றையும் சபையின் தலைவரிடம் கையளித்தார். இதன்போது உரையாற்றிய அவர்…

Read More

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பிரதியமைச்சர் அமீர் அலி மூலம் வாழ்வாதாரப்பொருட்கள் வழங்கிவைப்பு….

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்….

Read More