Headlines

பாலமுனையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், 403 வது லங்கா சதொச கிளை அட்டாளைச்சேனை, பாலமுனை பிரதான வீதியில் நேற்று (20) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஹுஸைர்(SDO) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் மற்றும் நுகர்வோர் அதிகார…

Read More

குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் மக்கள் காங்கிரஸ் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு!

குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான  அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில், நன்னீர் மீன் வளர்ப்பு வேலைத்திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவருமான என்.எம்.நஸீரின் வேண்டுகோளுக்கினங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதித் தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் மேற்பார்வையில்…

Read More

இன ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சி!

இன்று இணையத்தளம், முகநூல் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் செய்தியாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராசா அவர்கள் கண்டுபிடித்த ஒரு செய்தியான “முஸ்லிம்களிடம் ஆயுதம்” என்ற செய்தி இருக்கிறது. நீண்டகாலத்துக்குப் பின் ஞானம் பிறந்த செய்தி என்றாலும், அதன் சூத்திரதாரிகளில் இன்பராசாவும் ஒருவர் என்றுதான் கூற வேண்டும் நாட்டின் இறைமைக்கு மதிப்பளிப்பதாக கூறும் இன்பராசா அவர்கள், கடந்த காலங்களில் ஆயுத கலாச்சாரத்துக்கு அடிமையாகி நாட்டின் இறைமைக்கு மாறாக ஆயுதம் தூக்கி போராடியது மடமை என்பது அவருக்கு இப்போது…

Read More

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பொது கூட்டம்!

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (18) வவுனியா, றோயல் கார்டின் மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜே. ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மயூரன், நகர சபை தவிசாளர்கள்…

Read More

ஓட்டமாவடி, மாவடிச்சேனையில் லங்கா சதொச கிளை திறப்பு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

கடந்த ஆட்சியில் 600 மில்லியனுக்கு மேலாக நஷ்டத்தில் இருந்த லங்கா சதோச நிறுவனம், கடந்த வருடம் 350 மில்லியனுக்கு மேல் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். லங்கா சதோச நிறுவனத்தின் 401 கிளை ஓட்டமாவடி மாவடிச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) திறந்து வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். கடந்த ஆட்சிக்…

Read More

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் கடாட்டுகம பாடசாலையின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடாட்டுகம அ/ஜாயா மகா வித்தியாலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் (15) நடைபெற்றது. பாடசாலையின் ஆசிரியர் ரியாஸ் அஹமட்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக இஷாக் ரஹுமான் எம்.பி கலந்துகொண்டார்.விசேட அதிதிகளாக கெக்கிராவ பிரதேச சபையின் உப தலைவர் எம்.எல்.ஹிலால்தீன், கெக்கிராவ பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் ஜயரத்ன திசாநாயக்க, வலயக்கல்வி…

Read More

“காய் நகர்த்தலால் ஓட்டமாவடி பிரதேச சபையை கைப்பற்றினோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!

அரசியல் சதுரங்கத்திலே எவ்வாறு காய் நகர்த்தலாம் என்ற விடயத்திலே சரியாக நகர்த்தியதன் மூலமே ஓட்டமாவடி பிரதேச சபையில் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது என்று மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை மற்றும் பதுரியா கிராமங்களில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். ஓட்டமாவடி…

Read More

ஏதிலிகளை தாக்கும் எறிகணைகள்! -சுஐப்.எம்.காசிம்-

கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில் தனிப்பெரும்பான்மை தலையெடுப்பதும், இன்னொரு சமூகத்துக்கான அபிவிருத்திகளை இனச்சாயம் பூசித்தடுப்பதும் நிலைக்கும் வரை, இன இணக்கங்கள் துருவங்களாகவே தென்படப்போகின்றன. தாம் சார்ந்த சமூகத்துக்கு எதையும் செய்யாத சில மக்கள் பிரதிநிதிகள், இன்னொரு சமூகத்தின் தலைவன் எதையாவது சாதிப்பதை பொறுத்துப்போகும் பக்குவத்தின் அடித்தளத்திலிருந்தே நல்லிணக்கம் சாத்தியப்படும். ஆனால், இப்பக்குவம் எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை….

Read More

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மற்றும் மின் வணிகம் ஊடாக மேலும் வலுப்படுத்தவுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை நெலும்பொக்குண அரங்கத்தில் இடம்பெற்ற ஆடைத் தொழிற்துறையின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில்…

Read More

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? விளக்கம் கேட்கின்றது அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு!

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  ஊடகப்பிரிவு  அரசாங்கத்தைக் கோரியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச கருத்துச் சுதந்திரம், ஊடகச்சுதந்திரங்களைப் பயன்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிட முடியும்….

Read More

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்றைய (16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் T D S P பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார். தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாவனையில் 3 வாகனங்கள் மாத்திரமே …

Read More

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின்  விலையை அதிகரிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த…

Read More