Headlines

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு  தயாராக உள்ளது!

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்துள்ள தேசிய கூட்டுறவு கொள்கை, அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், இலங்கையின் கூட்டுறவு துறை  முன்னோக்கி நகர்வதற்கு குறிப்பாக, வழிகாட்டல்  மற்றும் கையேட்டு…

Read More

மக்கள் காங்கிரஸின் உடப்பு வட்டார நிர்வாகக் குழுக் கூட்டம்!

நான்கு கிராமங்களை உள்ளடக்கிய உடப்பு வட்டாரத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, பெரும்பான்மையான தழிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஊடகப்பிரிவு-

Read More

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சி – மொனராகலையில் ஆரம்பம்!

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நடாத்தப்படும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மொனராகலையில் நேற்று (29) ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அங்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பல்வேறு அரச நிறுவனங்களின் கண்காட்சிக் கூடங்களுக்கும் அமைச்சர் விஜயம்…

Read More

உப்பு நிறுவனம் குத்தகையில் வைத்திருந்த 1050 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானம்!

பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை, நிவாவெளி, இறக்க கண்டி, கும்புறுபிட்டி, குச்சவெளி சிறுமீன்பிடி கைத்தொழிலாளர்களின் தொழிலைத் தடையின்றி மேற்கொள்ளும் பொருட்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதனால், அன்றாட ஜீவனாம்சங்களில் ஈடுபடும் சிறுமீனவர்கள், தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்…

Read More

இஷாக் எம்.பி.யின் ஏற்பாட்டில் மைத்ரீகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைத்ரீகம எனும் கிராமத்தில் குடிநீர் கிணறு, நீர்ப்பம்பி மற்றும் நீர்த்தாங்கி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினைக்கு மிக நீண்டகாலமாக முகம் கொடுத்து வந்த அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் தங்கள் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடி அப்பிரச்சினைகான தீர்வினை பெற்றுத்தரும்படி வேண்டிக்கொண்டதற்கமைய அவர் அது குறித்து விசேட கவனம் எடுத்து அவர்களுக்கான தீர்வினை…

Read More

துருக்கியின் உதவியுடன் இரண்டு கிராமங்களுக்கு குடிநீர் வசதி!

துருக்கி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட மிகநீண்ட நாட்களாக நீருக்காக கஷ்டப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் மாராப்பிடிய, பகமுனே ஆகிய இரண்டு கிராமங்களுக்கு குழாய் கிணறு மூலம் நீரை பெற்றுக்கொள்ளும் வசதிகளை பெற்றுக்கொடுத்ததுடன், நேற்று முன்தினம் (27) துருக்கி நாட்டு நிறுவன சகோதரர்களுடன் இணைந்து  மக்கள் பாவனைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவதுடன், பெரும்பான்மை இன சகோதரர்களுக்கும்…

Read More

பெருக்குவட்டான் கிராமத்துக்கான மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம்!

கல்பிட்டி பிரதேசத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு வட்டாரம், பெருக்குவட்டான் கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியாவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கனமூலை வட்டார அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான பைசர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர். (ன)

Read More

“இனவாதங்களும் பிரதேசவாதங்களுமே எமது தொகுதியின் அரசியல் இழி நிலைக்கு காரணம்” பிரதேச சபை ஆசிக் எடுத்துரைப்பு!

கொத்தாந்தீவு மக்களுக்கான காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான பொதுக்கூட்டம் நேற்று (28) கொத்தாந்தீவில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், சஹ்தி மற்றும்  ஐ.தே.க கல்பிட்டி தொகுதி அமைப்பாளர் நஸ்மி ஆகியோரும் கலந்துக்கொண்டனர். இங்கு கலந்துக்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உறையாற்றும் போது, மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் பிரதேசமென்றால்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் 02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் தோரகொடுவ பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை கட்டிடம்!

குருநாகல் மாவட்டம் பன்டுவஸ்நுவர தேர்தல் தொகுதிக்குட்பட்ட தோரகொடுவ பிரதேசத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். ‘தோரகொடுவ கிராம மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளின் பேரில், அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதியொதுக்கீட்டிலிருந்து என்.எம்.நஸீரின் முயற்சியில் இதனை பெற்றுக்கொடுத்திருந்தார். இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் தோரகொடுவ மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து…

Read More

சந்தர்ப்பவாத சாஷ்டாங்கம்!

எல்லோரும் எதிர்பார்த்தது போல மாகாண சபைகளின் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அண்மைய வரலாற்றில் ஒரு வாக்கையாவது ஆதரவாகப் பெறாமல் கட்சி பேதங்களின்றி தோற்கடிக்கப்பட்ட பிரேரணை என்றால், அது இந்த மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைதான். இதிலுள்ள வியப்பு, அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சரே இதற்கு எதிராக வாக்களித்ததே. எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களித்தாலும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளதை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகவே கருத…

Read More

முசலி பிரதேச சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் 52.8 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு!

முசலிப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 52.8 மில்லியன் ரூபா நிதியை முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கியுள்ளதாக மன்னார், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்திற்கு பின் அபிவிருத்தியை கண்டு வரும் வடக்கு மாகாணம் இம்முறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, முசலி பிரதேசத்திற்கு பொருளாதார, சமூக செயற்பாடுகளில் அதிக…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் கிண்ணியா அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தொகுதி வாரியா? விகிதாசாரமாகவா? அல்லது கலப்பு தேர்தல் முறையா? என மாகாண எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்திருந்தது. இந்த நிலையில் குறித்த ஆணைக்குழு…

Read More