Headlines

சமையல் எரிவாயுவிற்கான விலைசூத்திரம் அறிமுகப்படுத்தவிருக்கிறது…

உலக சந்தையில் எரிபொருள்விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்க விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று உலக சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வி மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப உள்ளுரில் விலையை நிர்ணயம் செய்வதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின்  விலையை அதிகரிப்பது தொடர்பாக விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த…

Read More

புல்மோட்டை முள்ளிப்பொத்தானை பிரதேசங்களில் லங்கா சதொச கிளை திறப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மற்றும் முள்ளிப்பொத்தானை  ஆகிய இடங்களில் லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளைகள்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் மக்கள் பாவனைக்காக நேற்று (14) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்”அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கையை தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. எனது அமைச்சின் கீழ் செயற்படும் இத்தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபை, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் மற்றும் தொழில் முயற்சிகளை உறுதிப்படுத்தும் பொருட்டு இவற்றை அபிவிருத்தி செய்தல், ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் முன்னணி அரச நிறுவனமாக காணப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

வட பகுதி மீனவர்களுக்கு தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால், தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களை கட்டுப்படுத்த, நிரந்தரப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். கடந்த மூன்று தசாப்தகாலமாக யுத்தத்தின் பிடிக்குள் வாழ்ந்து, கடலில் சுயாதீனமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாதிருந்த மீனவர்கள், யுத்த காலத்தில் கடற்படையினரினதும், ஆயுததாரிகளினதும் கெடுபிடிக்குள் பல்வேறு அபாயங்களின் மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டு வந்தனர். குறிப்பிட்ட கடல் எல்லைக்கு அப்பால் சென்று தொழில்…

Read More

“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன?” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்!

பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட மாகாணசபை உறுப்பினர் ஜனோபரின்  நிதியொதுக்கீட்டில் வாழ்வாதாரத்…

Read More

துணுக்காய் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பொலிஸாரின் பாவனைக்கென வாகனம் கோரிய பொதுமக்கள்! மல்லாவி வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறும் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மல்லாவி பொலிஸாருக்கு வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பிரதேச பொதுமக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்தனர். துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் கே.பிரபாகரனின் நெறிப்படுத்தலின் கீழ், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் நேற்று மாலை (13) பிரதேச…

Read More

முல்லைத்தீவு, முள்ளியவளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி அங்குரார்ப்பண நிகழ்வு!

வடமாகாணசபை உறுப்பினர் ஜனோபரின் நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, முள்ளியவளை, குமாரபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் அங்குரார்ப்பண நிகழ்வில், (12) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். (ன)  

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நாளை பாண்டியன்குளத்தில் உயர்மட்டக் கூட்டம்! பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை!

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுடன் தொடர்புபட்ட போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள வீதிகளையும், உள்வீதிகளையும் புனரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்த திணைக்களங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டார். முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்த ராஜா ஆகியோரின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை (13) இடம்பெற்றது. பிரதேச செயலாளர் நிரஞ்சனாவின்…

Read More

கல்பிட்டி நகர வட்டாரங்களுக்கான நிருவாகக் குழு உறுப்பினர்கள் தெரிவுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர வட்டாரத்திலிருந்து மத்திய குழுவிற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம், கல்பிட்டி நகர அமைப்பாளர் முஷம்மிலின் ஏற்பாட்டில், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில் நேற்று (12) இடம் பெற்றது. இதன் போது, கல்பிட்டி நகர வட்டாரங்களுக்கான நிருவாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்தில், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பவுசான், முதலைப்பாளி வட்டார அமைப்பாளர் தௌபீக்…

Read More

குருநாகல், கல்கமுவ தொகுதி ஐ.தே.க ஆதரவாளர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தின், கல்கமுவ தேர்தல் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (12) இணைந்துகொண்டனர். ஐ.தே.க வின் கல்கமுவ தொகுதி வேட்பாளர் ஸாஜஹான், கல்கமுவ கூட்டுறவு சங்கத் தலைவரும், ஐ.தே.கவின் ஆதரவாளருமான ஜனாப் பதுருதீன் மற்றும் ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர்,  மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டனர். மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட ஆதரவாளர்கள் இங்கு…

Read More

மதவாச்சி, கட்டுவல பாதையின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ரிஷாட்!

மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கட்டுவல கிராமத்தின் பாதையை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) ஆரம்பித்து வைத்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, கட்டுவல A9 பிரதான வீதியிலிருந்து கட்டுவல மக்கள் மண்டபம் வரையிலான பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், இஷாக் ரஹ்மான் எம்.பி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் மற்றும் பிரதேச சபை…

Read More

தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், வடமாகாண சபை உறுப்பினர் ஜனோபர், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், நந்தன் மற்றும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான்…

Read More