Headlines

“இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு” நூலின் பிரதி, பிரதமரிடம் கையளிப்பு!

மறைந்த கல்விமான் எம்.எம்.எம். மஹ்ரூப் அவர்களினால் எழுதப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர்,  பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் தொகுக்கப்பட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட  “Exploring Srilankan Muslims ” இலங்கை முஸ்லிம்களின் ஆய்வு என்ற நூலின் பிரதி, நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில், பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை அரச…

Read More

“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (10) இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, இந்தியாவின் ஸ்மார்ட்…

Read More

உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் நிதியுதவியில் சிற்றூண்டிச்சாலை!

புத்தளம், உளுக்காப்பள்ளம் பாடசாலை நிர்வாகத்தினரினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீரினதும் வேண்டுகோளுக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு அண்மையில் (07) விஜயம் செய்திருந்தார். இதன்போது, பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினர் உறுப்பினர் ஆஷிக்கிடம் முன்வைத்தனர். அந்தவகையில், விஷேடமாக பெண்களுக்கென்று ஓர் தனியான சிற்றுண்டிச்சாலையை அமைப்பதற்கான தேவைப்பாடு  காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அவற்றைக் கேட்டறிந்துகொண்ட உறுப்பினர் ஆஷிக், தனது சொந்த நிதியிலிருந்து சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலையை…

Read More

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளராக இம்ரான் கான் தெரிவு! 

குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் காண் தெரிவு தெரிவு.. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பளார் இம்ரான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் அவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான…

Read More

கெக்கிராவ, கொல்லங்குட்டி காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

அனுராதபுரம், கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொல்லங்குட்டி பகுதியில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்த இடத்திற்கு இன்று (07) நேரடியாக விஜயம் செய்தனர். இஷாக் எம்.பி மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர், கொல்லங்குட்டி பிரதேச மக்களுடன் இந்தப் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடியதுடன், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மிக வேகமாக…

Read More

சம்மாந்துறையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு!

சம்மாந்துறையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வகுப்பறைக் கட்டிடத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) அல் அர்ஷத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நட்டி வைத்தார். இக்கட்டிடமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீட் அவர்களின் நினைவாக, அவரின் பிள்ளைகளினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.. சம்மாந்துறையில் சுமார் 67 இற்கும் மேற்பட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மீனவக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 534 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) மன்னார், காட்டாஸ்பத்திரி மைதானத்தில் இடம்பெற்றது.   மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன்,  வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் கிண்ணியா ஜாயா வித்தியாலயத்துக்கு தளபாடங்கள் கையளிப்பு! 

கிண்ணியா, T/K/T.B. ஜாயா வித்தியாலயத்த்துக்கு   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தளபாடங்களை வழங்கி வைத்தார். பாடசாலையின் கோரிக்கைக்கிணங்க, இன்று காலை (06) பாடசாலை அதிபர் முஸம்மிலிடம், தளபாடங்கள் கையளிக்கப்பட்டது. அத்துடன், பாடசாலையின் அபிவிருத்தி விடயங்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலையின்  அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடனும் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கலந்துரையாடினார். (ன)  

Read More

காக்காதீவு குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா!

கொழும்பு 15 காக்கா தீவு பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மட் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், மத்ரஸா நிருவாகத்தினர், ஆலிம்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும். பங்கேற்றிருந்தனர். (ன)    

Read More

விருதோடை கிராமசேவகர் காரியாலயத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் நிதியுதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்  வியாழக்கிழமை அன்று விருதோடை கிராம சேவகர் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது அங்குள்ள அலுவலகம் குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன், மக்கள் பாவனைகளின் போது அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகமாகக்கொண்டதாகவும் காணப்பட்டது. இதனை அவதானித்து உடனே கிராம சேவகருடன் கலந்துரையாடி, தனது சொந்த நிதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03) அக்குறைபாடுகளை மக்களின் நலன் கருதி நிவர்த்தி செய்து கொடுத்தார். அத்தோடு “எதிர்வரும் நாட்களில் புதிய கிராம சேவகர்…

Read More

முஸ்லிம்களின் நில கபளீகரப் படலம் நல்லாட்சியிலும் தீவிரமா? ? ?

புத்தளம் உப்பளங்களை அரசு அபகரிப்பதை அ.இ.ம.காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கின்றது. இந்த நில அபகரிப்பையெதிர்து 31/07/2028 ல் புத்தளத்தில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆதரிக்கின்றோம். உரிமைகள் சாய்ந்தால் உடமைகள் மாயும். உரிமைக்குக் குரல் கொடுப்போம் வறுமைக்கு விடை கொடுப்போம். ” நிலம் ” என்பது மனித வாழ்வின் உயிரோடும் உரிமையோடும் பின்னிப் பிணைந்துள்ளது. “நில” உரிமைப் போராட்டமே உலகின் போராட்டம் களுக்குக் காரணமாயுள்ளது. ” நிலம் ” என்பது உங்களுடைய மூதாதையரால் உங்களுக்கு வழங்கப்பட்டதல்ல ; மாறாக…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்துக்கான மத்திய குழுத் தெரிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான மத்திய குழு தெரிவு அறிவித்தல் வழங்கப்பட்டதன் படி கடந்த வெள்ளிக்கிழமை (03-08-2018) பி.ப 7.00 மணியளவில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அக்கரைப்பற்று பட்டின பள்ளி வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்11ம் வட்டார செயற்பாட்டுக் காரியாலயத்தில் அதன் முதற்செயற்பாட்டு நிகழ்வாக இடம் பெற்றது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான 2018 நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவும் இங்கு…

Read More