Headlines

குருநாகல், கல்கமுவ தொகுதி ஐ.தே.க ஆதரவாளர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தின், கல்கமுவ தேர்தல் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (12) இணைந்துகொண்டனர். ஐ.தே.க வின் கல்கமுவ தொகுதி வேட்பாளர் ஸாஜஹான், கல்கமுவ கூட்டுறவு சங்கத் தலைவரும், ஐ.தே.கவின் ஆதரவாளருமான ஜனாப் பதுருதீன் மற்றும் ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர்,  மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டனர். மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட ஆதரவாளர்கள் இங்கு…

Read More

மதவாச்சி, கட்டுவல பாதையின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ரிஷாட்!

மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கட்டுவல கிராமத்தின் பாதையை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) ஆரம்பித்து வைத்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, கட்டுவல A9 பிரதான வீதியிலிருந்து கட்டுவல மக்கள் மண்டபம் வரையிலான பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், இஷாக் ரஹ்மான் எம்.பி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் மற்றும் பிரதேச சபை…

Read More

தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், வடமாகாண சபை உறுப்பினர் ஜனோபர், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், நந்தன் மற்றும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான்…

Read More

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நட்டாங்கண்டலில், 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில்பேட்டை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு – பாண்டியன்குளம் பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.   கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் இந்த வாழ்வாதாரம்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் நேகம பாடசாலை மைதானத்தில் பார்வையாளர் அரங்கம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுரம், நேகம முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை (11) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ராஜ் ஐனுல் ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளர் தாரிக், கல்னேவ பிரதேச…

Read More

“அனுராதபுர வாழ் சிறுபான்மையினருக்கு அரசியல் முகவரியை பெற்றுத் தந்தவர் அமைச்சர் ரிஷாட்” இஷாக் ரஹ்மான் எம்.பி!

அனுராதபுர மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டாக்கனியாக இருந்த நிலையை மாற்றி, அந்த மாவட்டத்துக்கு அரசியல் முகவரியை பெற்றுத்தந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். அனுராதாபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு, கலாவெவ மற்றும் நேகம ஆகிய இடங்களில், இஷாக் ரஹ்மான் எம்.பியின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (11) பல்வேறு அபிவிருத்தித்…

Read More

கலாவெவ பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு, அனுராதபுரம், கலாவெவ பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் மாவட்ட இணைப்பாளர் தாரிக், இப்பலோகம பிரதேச சபையின் உறுப்பினர் நளீம் உட்பட அரசியல் பிரமுகர்கள பலரும் கலந்துகொண்டனர். (ன)

Read More

வவுனியா மாவட்ட யுவதிகளுக்கான கருத்தரங்கு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, வவுனியா மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி காணப்படும் யுவதிகளுக்கான கருத்தரங்கு வவுனியா, வெங்கடேஷ்வரா மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது. கூட்டுறவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நசீரின் வழிகாட்டலில், அமைச்சரின் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இணைப்பாளர் ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், கூட்டுறவுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சரத் ஆனந்த, நகரசபை…

Read More

“சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க மக்கள் காங்கிரஸ் அக்கறை” நாச்சியாதீவில் அமைச்சர் ரிஷாட்!

பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றி இதனை நன்கு உணர்த்தியது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம், நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம…

Read More

திருமலை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபை வட்டார மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில் மூதூர் சாரா மண்டபம் மற்றும் கிண்ணியா நூலக மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் சபை உறுப்பினர்கள், வட்டார இணைப்பாளர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் திருமலை…

Read More

சட்டவிரோத மணல் அகழ்வு விநியோகத்தை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர் செல்லத்தம்பு!

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு இன்று நேரில் சென்று பார்வையிட்டார். முறைகேடாகப் பயணம் செய்த மணல் டிப்பரை கைது செய்த தவிசாளர், சட்ட நடவடிக்கைக்காக இலுப்பைக்கடவை பொலிஸில் ஒப்படைத்தார். எமது பிரதேச வளங்களை எவரும் அழிக்க அனுமதிக்க முடியாது என தவிசாளர் மேலும் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் இலுப்பைக்கடவை வட்டார உறுப்பினர் மு.விஜயபாண்டி அவர்களும் இணைந்துகொண்டார். (ன)

Read More

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் கல்கிரியாகம பகுதியில் பாதை புனர் நிர்மாணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்கிரியாகம கிராமத்தில் 875M நீளமான பாதை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்கிரியாகம சந்தியிலிருந்து மத்திய மகா வித்தியாலயம் வரையிலான இப்பாதை கொங்கிரீட் கல் பதித்து புனர் நிர்மாணம் செய்யப்பட்டு 2018.08.04 அன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.   குறித்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு…

Read More