Headlines

அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், நீண்டகால அரசியல்வாதியும் பிரபல சமுக சேவகருமான அல்ஹாஜ் ஷகூர் மற்றும் பிரபல சமுக சேவையாளரும், முன்னணி அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளருமான சப்வான்  நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர். மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் அக்குரனை கிளை அமைப்பாளர் இல்யாஸ், அக்குரனை பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஆகியோர் முன்னிலையிலேயே,…

Read More

இப்தார் நிகழ்வு!

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சும், மன்னார் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் முசலி பிரதேச சபைத்  தவிசாளர் சுபியான் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Read More

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

புனித ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தினை இம்மாதம் 10 ஆம் திகதியோ, அல்லது அதற்கு முன்னரோ வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை  அரச திணைக்களங்களுக்கு சுற்று நிருபம் மூலம் உடன் அறிவிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தனவிடம் வேண்டியுள்ளார். இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மற்றும் அரச முஸ்லிம் ஊழியர் ஒன்றியம் உட்பட பல அமைப்புக்கள்…

Read More

“செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிங்கள கிராமமான கெவிலியாமடு கிராமத்தில் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.நிமால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார, பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து…

Read More

டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி!

இன்று (4)டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி முசலி முத்துரிப்புத்துறை கிராமத்தில் இன்று இடம்பெற்றது. முசலி பிரதேச சபை தவிசாளர் கலீபத் சுபிஹான் தலைமையில் PHI முசலி பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து, முசலி பிரதேச சபை ஊழியர்கள் மூலமாக இந்த சிரமதானப் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர் முகுசீன் றைசுத்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் J.பாயிஸ் அவர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒன்பதாவது வருடாந்த இப்தார் நிகழ்வு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம்பெற்றது. விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார் மேலும், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி எச்.எம்.றாசிக், வாழைச்சேனை ஹைராத்…

Read More

“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை” அம்பாறை கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போது, நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர்கள், உள்ளூராட்சித் தேர்தல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள்…

Read More

வெள்ளிமலை பொது மையவாடிக்கு சுற்றுவேலி அமைக்க நிதி ஒதிக்கீடு!

மன்னார், முசலி, வெள்ளிமலை அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்து, கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வெள்ளிமலை மையவாடிக்குப் பாதை அமைக்க நிதி ஒதிக்கீடு செய்தார். பாதைக்கான வேலைகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் பொது மையவாடியினை அடையாளப்படுத்தும் நோக்குடன், கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுவேலி அமைப்பதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களிடம், அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த நிலையில், தற்போது மாகாண சபையின் ஊடாக சுமார் இரண்டு இலட்சம் ரூபா…

Read More

வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!

இலங்கையில் 45 வயதுக்குட்பட்ட 20,௦௦௦  வேலையில்லாப் பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு, விண்ணப்பித்த 45 வயதுக்குட்பட்ட அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு ரூபா 20,000 கொடுப்பனவை மாதாந்தம்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

-ஊடகப்பிரிவு- பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை, இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்தில் அவரது அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் இருந்த போது, உற்பத்திச் செயற்பாடுகள் அதலபாதாளத்துக்குச் சென்றதாகவும், கரும்பு உற்பத்தியின் வீழ்ச்சி குறைவடைந்து, வருமானம் வீழ்ச்சி கண்டதாகவும் அவர்கள்…

Read More