Headlines

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!




வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒன்பதாவது வருடாந்த இப்தார் நிகழ்வு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார்

மேலும், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி எச்.எம்.றாசிக், வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் தலைவர் கலந்தர் பாவா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

-முர்ஷித் கல்குடா-

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *