Headlines

கல்பிட்டி, மண்டலக்குடா இல்மா பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு!




-ஊடகப்பிரிவு-

கல்பிட்டி மண்டலக்குடா இல்மா ஆங்கிலப் பாலர் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ரூபா 114,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில்,  கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த நிதி அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி நகர அமைப்பாளரான முஸம்மில் அண்மையில் பாடசாலைக்கு சமூகமளித்து அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *