Headlines

உடுநுவர பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- கண்டி, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட உயர்பீட உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை (04) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும்  மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட  பிரதேச சபை உறுப்ப்பினர்கள்,  முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது, பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாகவும், அத்தியாவசியத்…

Read More

கிழக்கில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவது ஏன்? டாக்டர். ஹில்மி மஹ்ரூப்!

-ஊடகப்பிரிவு- எம்.சி.எம்.ஆர் புட்போல் பியெஸ்டா (MCMR Football Fiesta 2018) மேற்படி உதைபந்தாட்ட தொடருக்கான விருது வழங்கும் வைபவம், கிண்ணியா நகரசபை நூலக கேட்போர் கூடத்தில்  எம்.சி.எம்.ரிஸ்வி தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும்,  கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, எமது மண்ணிலே விளையாட்டுத்துறை மாத்திரமல்ல, ஏனைய துறைகளான கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய எல்லாத் துறைகளிலும், இந்த…

Read More

“மாந்தை மேற்கு பிரதேசத்தை மத நல்லிணக்கமுள்ள பிரதேசமாக மாற்றியமைப்போம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து ஆகிய மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது, மத நல்லிணக்கத்துடன் கூடிய பிரதேசமாக இதனை மாற்றி, இன உறவுக்கு முன்னுதாரணம் மிக்க சபையாகத் திகழ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விழா, நேற்று…

Read More

‘மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’ மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தயானந்தன் பாண்டியங்குளத்தில் விசனம்!

-ஊடகப்பிரிவு- கொழும்பிலே கூடி மகிழ்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அபிவிருத்தித் தேவைகளையும், இன்னோரன்ன உதவிகளையும் பெற்றுவரும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், இந்தப் பிரதேசங்களில் அவரைப் பற்றிய பிழையான எண்ணங்களை மக்கள் மத்தியில் சித்தரித்து, வேற்றுமைகளை வளர்த்து வருவதாக முல்லைத்தீவு,  மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) தெரிவித்தார். மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, பாண்டியங்குளம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (04) இடம்பெற்றது. இந்த விழாவில் தலைமை…

Read More

  மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்கு கிளை மற்றும் இஸ்மாயில்புரம் கிளை உருவாக்கம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தலைமையில்,  வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அனஸ்தீனின் ஏற்பாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இஸ்மாயில் புரம் கிளை கடந்த திங்கட்கிழமை (30) உருவாக்கம் பெற்றது. அத்துடன், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீனின் ஏற்பட்டில், நவவி எம்.பியின் தலைமையில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்குக் கிளை  நேற்று (03) உருவாக்கம் பெற்றது. புத்தளம் நகரத்தின் கிழக்கு கிராம…

Read More

கல்பிட்டி, மண்டலக்குடா இல்மா பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- கல்பிட்டி மண்டலக்குடா இல்மா ஆங்கிலப் பாலர் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ரூபா 114,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில்,  கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த நிதி அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது. கல்பிட்டி நகர அமைப்பாளரான முஸம்மில் அண்மையில் பாடசாலைக்கு சமூகமளித்து அபிவிருத்திப்…

Read More

பிரதித் தவிசாளர் முகுசீன் றைசுதீனின் கன்னியுரை!

 -ஊடகப்பிரிவு- மன்னார் முசலிப் பிரதேச சபையின் தவிசளார், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (03) முசலிப் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த விழாவில் முசலிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றைசுதீன் தனது கன்னி உரையை ஆற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது, முசலிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அமர அருள்புரிந்த அல்லாஹ்வுக்கும், தேர்தலில் போட்டியிடச் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும், வாக்களித்த…

Read More

கம்பிரிகஸ்வெவ முஸ்லிம் பாடசாலையில் புதிய நூலகத் திறப்பு விழா! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- மத்திய நுவரகம் பலாத்த பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ கிராமத்தில் அமையப் பெற்றுள்ள அ/மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய நூலகத் திறப்பு விழாவும், பாடசாலை மைதானத்தை புனர் நிர்மாணம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (03) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் தொழிலதிபர் தாரிக் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பாடசாலை மைதானத்தின் விஸ்தரிப்பிற்காக அப்பிரதேசத்தை சேர்ந்த அலிக்கான்,…

Read More

மாந்தை மேற்கு பிரதேச சபை வரவேற்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேச சபையில் நேற்று (03) இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியாகு(செல்லத் தம்பு), பிரதித் தவிசாளர் உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் பல…

Read More