Headlines

தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! பிரதிஅமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை 206 D மற்றும் வாழைச்சேனை 206 ஆகிய பிரதேசத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில், அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, பிரதேச சபை கொடுக்கின்றோம்…

Read More

மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் வரிப்பத்தன்சேனை பகுதியில் பணிகளை ஆரம்பித்தார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர்,  ஊரின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள், கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஊர்ப் பிரமுகர்களுடன்  கலந்தாலோசித்தார். அத்துடன் இறக்காமம் பிரதேசபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானத்துக்குச் சென்று பார்வையிட்ட அவர், மைதானத்தை செப்பனிடல், சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளைக் கண்டறிந்துஅதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் மின்விளக்குகள் அற்ற பாதைகளைக் கண்டறிந்து, அந்த வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

உதயம் பனம் பொருள் உற்பத்தி அமைப்பிற்கான கட்டிடத் திறப்பு விழாவில் தவிசாளர் முஜாஹிர் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தலை மன்னார் கிராமத்தில் அமைக்கப்பட்ட உதயம் பனம் பொருள் உற்பத்தி அமைப்பிற்கான கட்டிடத் திறப்பு விழாவில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார். தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரிலேயே, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேச சபை செயலாளர்…

Read More

சம்மாந்துறை சென்னெல் கிராம வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, சென்னெல் கிராமத்தில் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் சீரற்று பற்றை, புதர்களுடன் காடுகளாக காணப்படுகின்றன. இதனால், அருகில் வசிக்கின்ற பொதுமக்கள்  அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த வீதிகளின் புனரமைப்பு தொடர்பில், மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷாட் அவர்களுக்கு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் எழுத்து மூலமான கோரிக்கைக்கிணங்க, மக்கள் பயன்பாட்டுக்கு…

Read More

சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரம் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!

-முர்ஷித் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைத்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார். இங்கு…

Read More

மக்கள் காங்கிரஸின் மாவத்தகம மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல், மாவத்தகம பிரதேசத்துக்கான மக்கள் சந்திப்பு நேற்று மாலை (30) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதோச நிறுவனத்தின் பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், குளியாப்பிட்டிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள் என…

Read More

ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்ட வேண்டும்! பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- முஸ்லிம்களின் ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் , வேறு இடங்களில் ஏதாவதொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு (27) இடம் பெற்ற…

Read More

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு! மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- பொலன்னறுவை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (29) பொலன்னறுவை, தம்பாளை கிராமத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் பெண்கள் விவகாரங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை மற்றும் மக்கள் காங்கிரஸின் தம்பாளை பிரமுகர் ஏ.எல்.ரஸ்மி உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பொலன்னறுவை பிரதேச வாழ் முஸ்லிம்கள்…

Read More

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது!

இலங்கையில் ஒரேயொரு சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாக சியாம் சிமெந்து நிறுவனம் தன்னை முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது! -ஊடகப்பிரிவு- ‘இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழுவோடு இணைந்து இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த நாங்கள் ஒன்றினைந்துள்ளோம்’ என இன்சீ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார…

Read More

குருநாகல் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் நகரில் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பில், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தலைமையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 15 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புடன் கூடிய வணிக வளாகக் கட்டடத் தொகுதியை  அமைப்பதற்க்கான இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர பிதா துஷார சன்ஜீவ, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன், மாகாண முதலமைச்சின் செயலாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் அரச நிருவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர்…

Read More