“பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்” அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- ‘நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒரு உகந்த சூழலினை வழங்கியுள்ளோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தொடருக்கு (CHOGM) இணையாக இடம்பெற்ற பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இவ்…
