Headlines

கற்பிட்டி பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சமாதானக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று, இன்று (16) கற்பிட்டி அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கற்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின்  தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஐ.தே.முன்னனியின் பிரதேச சபை உறுப்பினர்கள் சபையை அதிகப்படியான ஆசனங்களால் வெற்றிப்பெற்றும்,…

Read More

செலான் வங்கியின் புதுவருட நிகழ்வுகளில் இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- செலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் சிங்கள, தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இன்று (16) இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துசிறப்பித்தார். இதேவேளை, செலான் வங்கியின் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Read More

தவிசாளர் முஜாஹிர், பேசாலை கிறிஸ்தவ பாதிரியாரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், இன்று (16) பேசாலை கிறிஸ்தவ பாதிரியார் பெனோ அலெக்ஸ்சாண்டர் சில்வா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார், இதன்போது, மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இப்பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் காலங்களில் இப்பிரதேசத்தினை, மாவட்டத்தின் சிறந்த பிரதேசமாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் செய்வதாக தவிசாளர் வாக்குறுதியளித்துள்ளார்….

Read More

செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மனி!

-ஊடகப்பிரிவு- வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின. செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை (16)இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் இவருக்குக் கிடைக்கப் பெற்றன. இவரை…

Read More