Headlines

விளையாட்டுக் கழகங்களுக்கான காரியாலயத் திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச வாாியாக கால்பந்தாட்டக் கழகம், கிாிக்கட் கழகம் மற்றும் இளைஞர் கழகம் போன்றவற்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, அண்மையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் அங்குராா்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொலேஐ் ஒப் ஹெல்த் சயன்ஸ் கல்லூாியின் பணிப்பாளரும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான டாக்டர். முனாஸிக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா். பொத்துவில் பிரதேசத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் பங்குபற்றி வெற்றிபெற்ற பிரதேச…

Read More

முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்சிக் கிளைகள் திறப்பு!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக் கிளைகள் ஆரம்பித்தல் மற்றும் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு, மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நேரடி வழிகாட்டலில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீனின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.   அந்தவகையில், பிச்சைவாணிபங்குளம், 04ஆம் கட்டை, வேப்பங்குளம், பி.பி.பொற்கேணி, எஸ்.பி.பொற்கேணி, அளக்கட்டு, அகத்திமுறிப்பு, புதுவெளி, கூழாங்குளம், தம்பட்டமுசலிக்கட்டு, சிலாவத்துறை, பூநொச்சிக்குளம், பண்டாரவெளி, மணற்குளம், இலந்தைக்குளம், வெள்ளிமலை,…

Read More

‘கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி. தெரிவிப்பு! 

-ஊடகப்பிரிவு- கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நம்பிக்கை பொறுப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த மாதத்தில் நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் பௌத்தமதத் தலைவர்கள் மற்றும்…

Read More

ஜனாதிபதியுடன், மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உள்ளிட்ட குழு பாகிஸ்தான் பயணம்!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் 78வது குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (22) பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் ஆகியோர் உட்பட  அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியுடன் நாளை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் அரசின் விஷேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்  இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.  

Read More

நீராவிப்பிட்டி மக்களுக்கான மின்னிணைப்பு வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற செயலணியூடாக மின்சார இணைப்புப் பத்திரத்தை, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர், முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் ரிபாய், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறிய கைத்தொழில் திட்டமிடல் ஆலோசகர் மொஹிடீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.      

Read More

‘மட்டக்களப்பில் எதிர்வரும் 05 வருடங்களுக்குள் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில், வீடுகள் இல்லாமல் இருக்கும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “செமட்ட செவன” வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில், 272 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதான நிகழ்வு விளாந்தோட்டத்தில், நேற்று முன்தினம் (19) மாலை இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

மாணவத் தலைவர் தின நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கொழும்பு 15, மோதரை புனித ஜேம்ஸ் ஆரம்ப பாடசாலையின் மாணவத் தலைவர் தின விழா, அண்மையில் பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹமட் பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.        

Read More

தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-முர்ஷிட் கல்குடா- கண்டி பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் சில நாட்களாக பாராமுகமாக இருந்தது கவலைக்குரிய விடயம். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களின் பின்னர் விசாரணை இடம்பெற்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

மகளிர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- பதவிய பிரதேச சபைக்குட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (1 7), அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில், இஷாக் ரஹுமான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது. இதேவேளை, அனுராதபுரம் பதவிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு கிரிக்கட் மற்றும் கரப்பந்து விளையாட்டு உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…

Read More

கோறளைப்பற்று மத்தி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவி! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பிறைந்துரைச்சேனை அல்/அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (18) இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தையூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம…

Read More

மாவடிப்பள்ளியில் மக்கள் காங்கிரஸின் மகளிர் பணிமனை திறப்பு!

–ஊடகப்பிரிவு– அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மாவடிப்பள்ளியிலுள்ள மகளிருக்கான பணிமனை திறப்பு விழாவும், வாழ்வாதார உதவிகள் சம்பந்தமான ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் நேற்று (17) மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஜலீலின் ஏற்பாட்டில், ஆதம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவடிப்பள்ளி மக்கள் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர், டாக்டர்.முனாசிக், உறுப்பினர்கள் உட்பட மகளீரும் கலந்து சிறப்பித்தனர்.    …

Read More

மகளிருக்கான சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட  அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் மகளிருக்கான சுயதொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) புத்தளம் பிரதேச சபை வரவேற்புக் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.    

Read More