Headlines

“க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்”  பிரதி அமைச்சர் அமீர் அலி!

-கல்குடா முர்ஷித்- 2017ம் ஆண்டு முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சித்தி பெற்ற அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவதில் பெருமையடைவதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்! இலங்கையில் தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண…

Read More

“உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக ஸ்லோவாகியா திகழ்கின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அந்நாட்டு அமைச்சர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்ற ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுப்படுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட அழைப்பின் பேரில், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைமைக் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இக்கலந்துரையாடலில் தொடந்து கருத்து தெரிவிக்கையில், எங்கள் றப்பர் உட்கொள்ளலை…

Read More

கசப்புணர்வுகளை மறந்து நிந்தவூர் மண்ணுக்கு பணி செய்வோம்” புதிய தவிசாளர் தாஹிர் அறைகூவல்!

-ஊடகப்பிரிவு- தேர்தலகால கசப்புணர்வுகளை மறந்து நமது பிரதேசமான நிந்தவூர் மண்ணுக்கும், மக்களுக்கும் ஒன்றுபட்டு பணிசெய்வதற்கு சகல உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.எம்.தாஹிர் அறைகூவல் விடுத்தார். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களிடையே சபையின் தலைவர், உபதலைவர் தெரிவுக்கான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் நடைபெற்றது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில்,…

Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் (தாஹிர்) 08 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 03 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 01 வாக்குகளுமாக 08 வாக்குகளைப் பெற்று அவர் தவிசாளர் ஆனார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள்…

Read More

வாழ்வாதார உதவி வழங்கல்! அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில், மீன்பிடி , தையல் தொழில் , சிறுகடை  போன்ற 243 தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், பல்துறை சார்ந்த கைத்தொழில் உபகரணங்கள் நேற்று (26) தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.   இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. தனீஸ்வரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் பங்கேற்புடன்…

Read More

நிந்தவூர் பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸின் தாஹிர் தவிசாளராகவும், சுதந்திரக் கட்சி சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராகவும் ஏகமனதாகத் தெரிவு!

 -ஊடகப்பிரிவு- நிந்தவூர் பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று மாலை (27) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த அஸ்ரப் தாஹிர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை…

Read More

“இலங்கையின் வாய்ப்பான சூழலை பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” பங்களாதேஷ் சுதந்திரதின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- இலங்கையில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை, பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கைத்தொழில், வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரதின நிகழ்வுகள் நேற்று மாலை (26) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பங்களாதேஷ் நாட்டின் 47 வது சுதந்திர மற்றும் தேசியத் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கம்…

Read More

தேநீர் கோப்பைக்குள் ஆவி பிடிக்கும் அரசியல்!

-சுஐப் எம்.காசிம்- எதற்கெடுத்தாலும் வீறாப்பு பேசி அறிக்கை விடுவோருக்கு அகிலமே உருண்டையாம். நடப்பதை நாலு எட்டு வைத்து எட்டிப்பார்க்க இஸ்டமில்லாத இந்த பிரகிருதிகள், வீட்டுக்குள் ஏசியில் இருந்தவாறே சூடாக தேநீர் குடித்தவாறு அறிக்கைகள் விட்டு குட்டையை குழப்பி விடுகின்றனர். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை ஒரு போதும், கடந்த காலத்துடன் ஒப்பிட முடியாது என்பதை இந்த பிரகிருதிகள் இன்னும் உணரவில்லை. இதுவே இவர்களின் அப்பாவித்தனம். நாட்டில் 1956, 1983 மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண நிலைமைகள் வேறு,…

Read More

மக்கள் காங்கிரஸும் சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக நௌஷாட்! பிரதித் தவிசாளராக ஜெயச்சந்திரன்!

-ஊடகப்பிரிவு-   சம்மாந்துறை பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று காலை (27) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.நௌசாட், பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோருக்காக இடம்பெற்ற…

Read More

ஆரையம்பதி பிரதேச தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-முர்ஷிட் கல்குடா- கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.   ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,  கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர் டி.லோகநாதன், எஸ்.ஜெகநாதன், திருமதி.ஜெ.மீனா, எஸ்.கைலாசபதி, பிரதேச செலயக உத்தியோகத்தர்கள்…

Read More

இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் நவவி எம்.பி பிரதம அதிதியாகப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மதுரங்குளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது 5,00,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் நவவி எம்.பியின் விசேட நிதியிலிருந்து இளைஞர்களின் விளையாட்டுத்திறமையினை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைக்கப்பட்டமையுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  …

Read More

கெக்கிராவ – மகவெவ பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இஷாக் ரஹுமான் எம்.பியினால் தீர்வு!

-ஊடகப்பிரிவு- சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே, கெக்கிராவ பிரதேச சபைக்குட்பட்ட மகவெவ கிராமம். இந்த கிராமவாசிகள் பல வருடங்களாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், இப்பிரதேச மக்களுக்கு கிணறுகளை அமைத்துக்கொடுத்து அவர்களது குடி நீர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  அந்தவகையில் இந்த குடிநீர்க் கிணறுகளை மக்கள் பாவனைக்கு…

Read More