Headlines

‘மு.கா வினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா-  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் பிறைந்துறைச்சேனை வட்டார வேட்பாளர் நாஸருக்கு ஆதரவு தெரிவித்து, பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ஸ்ரீ…

Read More

“பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்கால அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது” டாக்டர்.ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- இஸ்லாமிய வரையறைக்குள் முஸ்லிம் பெண்கள் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அப்போதுதான் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். நிந்தவூரில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, மூட நம்பிக்கையிலும், பெண்களால் முடியாது என்ற அறியாமையிலும் இருந்த பெண்கள், இன்று கல்வித்துறையில் மாத்திரமின்றி ஏனைய அனைத்துத்…

Read More

“குரல் கொடுக்காவிடினும் காட்டிக் கொடுக்காமலிருங்கள்” டாக்டர். பரீத்!

-ஊடகப்பிரிவு- “இன்று சமூகத்தை விற்றுப்பிழைக்கும் சில முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் தேசியம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்காது மௌனம் காத்து வருகின்றனர். இவர்கள் எம்மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் அமைச்சர் ரிஷாட் போன்றவர்களைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைக் கைவிடவேண்டும்” இவ்வாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளரும், மக்கள் காங்கிரஸின் சுகாதாரப் பிரிவின் தேசிய இணைப்பாளருமான டாக்டர். ஏ.எல். பரீத் கூறினார். நிந்தவூர் பிரதேச சபைக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில்,…

Read More

“சுயநலம் கொண்ட தனிமனிதனிடம் மு.கா சிக்கித் தவிக்கின்றது” ஐ.ம.கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி!

 -ஊடகப்பிரிவு- அரசியலுடனும், ஆயுதக் குழுக்களுடனும் போராடி வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இன்று சுயநலம் கொண்ட ஒரு தனி மனிதனிடம் சிக்கித் தவிக்கிறது. அதனை மீட்டெடுப்பதே எமது பணியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம். ரீ.ஹசன் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் (03) நிந்தவூர் புதுநகர் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…

Read More

“கிழக்கில் முஸ்லிம் மாகாணமின்றேல் இணைப்புக்கு ஆதரவு கிடைக்காது” சேகு இஸ்ஸதீன்!

-ஊடகப்பிரிவு- வடக்கு – கிழக்கு தமிழ் மொழி மாநிலத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி மாகாண சபைக்கான ஒத்துழைப்பை தமிழ்த்தேசியம் முன்னெடுக்காது போனால் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு தமிழ்மொழி மாநிலத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி அதிகாரத்தையோ அல்லது சமஷ்டியையோ தமிழர்களுக்கு வழங்குவது வட, கிழக்கு முஸ்லிம்களின், குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், அரசியல் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டையாகவும்…

Read More

ஓட்டமாவடி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-முர்ஷித் கல்குடா- கல்குடாப் பகுதியில் காணப்படும் பிரச்சினைகளை பிரதமர் எதிர்காலத்தில் தீர்த்துத் தருவேன் என்றது, தேசியத்திலே எங்களது பிரச்சினை ஏற்புடமையாக்கப்பட்ட பிரச்சினை  என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வேட்பாளர் எச்.எம்.அமீர் தலைமையில் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே…

Read More

கனேவல்பொல தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. அந்தவகையில்,  கெக்கிராவ பிரதேச சபைக்கு கனேவல்பொல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வேட்பாளரை ஆதரித்து கனேவல்பொலயில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் வேட்பாளர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.        

Read More

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்” பெரியமடுவில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத்…

Read More

மஸ்தான் எம்.பியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அவரது ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More

வவுனியா தவசிகுளம் மற்றும் காத்தார்சின்னக்குளத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான வரதராஜ் துரைராஜ், வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து நேற்று முன்தினம் (04) தவசிகுளத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வேட்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், இணைப்பாளர் பர்ஹான், ஓய்வு பெற்ற…

Read More

சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு வஜயம்!

-முர்ஷித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, அம்பாறை, சவலக்கடை, சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு ஒன்று கடந்த சனிக்கிழமை (03) விஜயம் மேற்கொண்டது. இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முன்னாள் உபவேந்தர் கலாநிதி  இஸ்மாயில், மருத்துவ கலாநிதி பரீட் உள்ளிட்ட வர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, தாறுல் ஹிக்மா அரபுகல்லூரி, அல் ஹூதா ஜூம்ஆபள்ளி ஆகியவற்றின் புனர்நிர்மாணம்  மற்றும் குடியேற்ற கிராம மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்களும்…

Read More

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிரணிக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சம்மாந்துறை மல்கம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிருக்கான  கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். டாக்டர்.ஹஸ்மியா இங்கு உரையாற்றுகையில், எமது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. அதனைத் தட்டிக் கேட்கின்ற ஒரே…

Read More