வாகரை காரமுனை கிராமத்துக்கு பஸ் சேவை ஆரம்பம்!
-முர்ஷித் கல்குடா- இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையினால் மட்டக்களப்பு தொடக்கம் மீள்குடியேற்ற கிரமமான வாகரை காரமுனை வரையான பஸ் சேவை கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் மீள்குடியேற்ற கிரமமான காரமுனை மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய குறித்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை பேரூந்து சாலையின் முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற…
