Headlines

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிரணிக் கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சம்மாந்துறை மல்கம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மகளிருக்கான  கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

டாக்டர்.ஹஸ்மியா இங்கு உரையாற்றுகையில்,

எமது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. அதனைத் தட்டிக் கேட்கின்ற ஒரே ஒரு தலைமையாய் தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்பவர் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாத்திரமே ஆவார். ஆகையால், நமது சமூகத்தின் துயர் துடைக்கும் எமது தலைவரினதும், கட்சியினதும் வெற்றிக்காய் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏகோபித்த தலைவராகத் திகழும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய சேவைகள் தொடர நாங்கள் பிராா்த்திக்க வேண்டும் என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *