Headlines

வவுனியா புளிதரித்தபுளியங்குளத்தில் வேட்பாளர்களுடனான சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா, சாளம்பைக்குளம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று (13) மாலை இடம்பெற்றது.

வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாகிர் ஆகியோரை ஆதரித்து புளிதரித்தபுளியங்குளம், ஹிஜ்ராபுரம், அரபாநகர் ஆகிய கிராமத்தை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும்  ஊர் முக்கியஸ்தர்களுடனான இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மட், தொழிலதிபர் ஆப்தின், உலமாக்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *