Headlines

தொழில் பெறுவதில் உள்ள சவால்களை முறியடிப்போம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ M.H.M . நவவி ஹாஜியார் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த சிகரம் தொடு எனும் பட்டதாரிகளின் ஆவணம் திரட்டல் நிகழ்வு கடந்த சனியன்று(18.02.2017) இனிதே நடந்து முடிந்தது . அதற்கு ஒத்துழைப்பு நல்கிய கட்சியின் சொந்தங்கள் / வருகை தந்த பட்டதாரிகள் / ஊடகவியல் நண்பர்கள் / வளவாளராக வருகை தந்த…

Read More

“உணர்ச்சிவசப்பட வேண்டாம்” தம்புள்ளை விவகாரம் தொடர்பில் உலமா சபை

தம்­புள்­ளையின் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடு­க்­கப்­படும் சவால்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டா­மெ­னவும் அமைதி காக்கும் படியும் அல்­லாஹ்­விடம் துஆ கேட்கும் படியும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதிய இட­மொன்­றுக்கு இட­மாற்­றிக்­கொள்­வ­தற்­கான காணி ஒதுக்­கீட்டில் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றி­நிலை மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு விடு­க்­கப்­பட்­டுள்ள சவால்கள் தொடர்­பாக நேற்­றுக்­காலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பிர­தி­நி­தி­க­ளுக்கும் தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் நிர்­வாக…

Read More

நுகர்வோர் அதிகாரசபையின் வேட்டையில் சிக்கிய 52 வர்த்தகர்கள்

-அமைச்சின் ஊடகப்பிரிவு நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் 137 வர்த்தக நிலையங்களை நேற்று (20)  சுற்றிவளைத்த போது, அரிசியை அதிக விலையில் விற்ற 52 வியாபாரிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 13 வர்த்தகர்களும், கண்டியில் 12 வர்த்தகர்களு, குருநாகலில் 10 வர்த்தகளும், அநுராதபுரம் 8 வர்த்தகர்கள், வவுனியா 7 வர்த்தகர்கள், பொலநறுவை மற்றும் கேகாலையில் 6 வர்த்தகர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது அகப்பட்டுக் கொண்டனர். நுகர்வோர்கள் வழங்கிய…

Read More

மருதமுனை காரியப்பர் வீதி அமைச்சர் றிசாட்டினால் காபட் வீதியாக புனரமைப்பு

மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் அபிவிரித்தித் திட்டமிடல் இணைப்பாளருமான சட்டத்தரணி துல்கர் நயீம் தெரிவித்தார். மேற்படி வீதியானது மிக நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாது பள்ளமும் படுகுழியுமாகக் காட்சியளிக்கின்றது. இதனால் இந்தப்பாதையால் போக்குவரத்தில் ஈடுபடுவோரின் விசனத்துக்கும் உள்ளாகியிருந்தது. ஏற்கனவே துல்கர் நயீம் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மருதமுனையின் உள்வீதிகளில் முக்கியமான வீதிகள் அனைத்துமே ஜப்பானிய…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் கலாவெவ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கலாவெவ அலுவலகத்தில் அண்மையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

Read More

ஜெயந்தியாய பிரதேசத்தில் இடம்பெற்ற தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

நேற்று முன்தினம் 19.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஜெயந்தியாய அபிவிருத்தி குழு தலைவர் கரீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்…

Read More

ஒரே வகையான அரிசிக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது ஏன்? தகவல் திணைக்கள ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்!!!

சுஐப் எம் காசிம் அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியை முறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 20 மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட வரட்சியை காரணம் காட்டி அரிசிக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதனால் தான் வெளிநாடுகளில் இருந்து அவசரமாக அரிசியை…

Read More

தாஜ் சமுத்திராவில் வேலைப்பட்டறை அங்குரார்ப்பண நிகழ்வை அமைச்சர் றிஷாட் தொடக்கிவைப்பு!!!

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் தொடர்பிலான வேலைப்பட்டறையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் பிரதிநிதி எரிக் விஜ் ஸ்டோர்ம், வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More

கல்பிட்டி கல்வி வளர்ச்சி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்

கல்பிட்டி மக்களின் கல்வியில் அக்கறை கொண்ட “கல்பிட்டி கல்வி வட்டம்” என்ற அமைப்பினர் நேற்று 2017.02.19 கல்பிட்டியில் வைத்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில், கல்பிட்டி மக்களின் கல்வி மட்டம், கல்பிட்டி பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் சில கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

Read More

கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி

கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி பாடசாலையில் அண்மையில் (2017.02.17) நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

தாராபுரம் அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி

மன்னார் தாராபுரம் அல் – மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (18) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

ஊத்துச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நேற்று 19.02.2017 ஆம் திகதி ஊத்துச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மோகன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் , மீனவர்களுக்கான மீன் பிடி வலை, மண்வெட்டி, மற்றும்  சோளன் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக…

Read More