Headlines

குறிஞ்சாக்கேணி பாலர் பாடசாலைகளின் கலை,கலாசார நிகழ்வு!





-ஊடகப்பிரிவு-

குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை மூன்று முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை கலாசார நிகழ்வு குறிஞ்சாக்கேணி வீ.சீ மைதானத்தில் சனிக்கிழமை (16) அன்று இடம்பெற்றது.

முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.முஜீப், ஆசிரியர் என்.எம். சமீம்(ECCD), அரபா பாடசாலை அதிபர் ஆர்.நஸீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முனைச்சேனை வட்டார வேட்பாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *