Headlines

அரசியல்சொல்வாக்கு இருப்பதாக கூறி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த இடமளியோம். நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கெடுக்காது பிரதேச மக்களின் நலனையும் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொண்டே தகைமை பெற்றவர்களுக்கே புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் உரையாற்றினார். இந்த  நிகழ்வில் கனிய மணல்…

Read More

மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணிக்கு  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பங்களிப்பு நல்கவேண்டும்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது பூரண பங்களிப்பை நல்கவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். பங்கொக்கை தளமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறுவகத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை (13.09.2017) அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து பேச்சு நடத்திய போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்தச் சந்திப்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சிம்ரின் சிங் அவர்களும்…

Read More

ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டுங் லாய் மார்க்( Tung -Laimargue) அவர்களும் கலந்துகொண்டனர்.  

Read More

பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணக்காளர்களின் பங்களிப்பு அபரிமிதமானதெனவும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக, புலமைப்பரிசில்கள் வழங்கிவருவது பாராட்டத்தக்கது எனவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பட்டயக்கணக்காளர்களுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தொவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் கூறியதாவது, எனது அமைச்சின்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் அல் ஹாஜ் இஷாக் ரஹ்மான் நிதி ஒதுக்கீட்டில் பாதைகள் புனரமைப்பு

கொல்லன்குட்டிகம மக்களின்  பாதைகள் சேதமடைந்து மிகவும் சிரமப்பட்டு வந்த நீண்டகால பிரச்சினையை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவரும் அனுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

Read More

புத்தளம் விஞ்ஞான கல்லூரி கட்டிட வேலைகளை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி எம்.பி

புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இக்கட்டிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பாரிய முயற்சியின் பயனாகவும், அவர்களின் வேண்டுகோளின் வாயிலாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் மூலம் புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.. கட்டிட நிர்மாண வேலைகளை பாராளுமன்ற…

Read More

தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி மாக்கந்துறை இன்கியுபேட்டர் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

தேசிய சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான கொள்கை ஒன்றையும் தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர மத்திய நிலையம் அங்குரர்ப்பண விழாவில் விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…

Read More

நவவி எம் பி முயற்சியால் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்படும் அலுவலக கட்டிட வேலைகளை பார்வையிட்டபோது

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மூன்று மாடி அலுவலக கட்டிடத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.. குறித்த வேலைகளை பார்வையிடுவதற்காகவும், பாடசாலை அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் சாஹிரா தேசிய பாடசாலைக்கு  விஜயம்…

Read More

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம்  மன்னார் மடு பிரதேச செயலகத்திற்குற்பட்ட தட்சனாமருதமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். மடு பிரதேச செயலாளர் எப் பி சத்தியசோதி  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, உள்நாட்டு…

Read More

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும்…

Read More

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும்…

Read More

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதன் மூலமே  அபிவிருத்தியின் உரிய இலக்கை எட்ட முடியும். மன்னார் நானாட்டானில் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’ வேலைத்திட்ட ஜனாதிபதி நடமாடும் சேவை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு…

Read More