Headlines

அமெரிக்கா சென்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் அறிக்கையை கோரும் பிரதமர்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல்அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர்களின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்ற விதம் தொடர்பான அறிக்கையினையும்பிரதமர் பாராளுமன்ற அலுவலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்க சுற்றுலாவில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசியம் என்ன என்றும், அவர்கள் அமெரிக்காவில்முன்னெடுத்த அரசியல் விவகாரங்களையும் குறித்த அறிக்கையில் உள்ளடக்குமாறுபிரதமர் கோரியுள்ளார்.

Read More

சலாவ சம்பவம் : மூன்று காலத்திற்கு நட்ட ஈடு

சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ முகாம் வெடி விபத்துச் சம்பவத்தில் முற்றுமுழுதாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை தமது அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து சமர்ப்பிக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

Read More

கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்பு

இலங்கையில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது 11 கிளிகள், 6 லவ்பேட்ஸ் மற்றும் 10 சிவப்பு வர்ண புல்புல் குருவிகள் என்பன கைப்பற்றப்பட்டன. இந்த பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு பெட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் குறித்த பறவைக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டபோது 10கிளிகளும் 4 லவ்பேட்ஸூம் இறந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலைத்தீவை சேர்ந்த இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு…

Read More

பதிவு செய்யாமல் வெளிநாட்டு வேலைக்குச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தல்!

பதிவுக்கு உட்படாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தலாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இளம் நாடாளுமன்ற அமர்வுகளில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பதிவு செய்து கொள்ளாது சுற்றுலா வீசா மூலம் வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. அரசாங்கத்தின் பதிவுக்கு உட்படாது மேற்கொள்ளப்படும்…

Read More

அளுத்கம நாகரிலுள்ள பிரபல முஸ்லிம் ஆடை வர்த்தக நிலையம் தீக்கரை

நேற்றிரவு(22) அளுத்கம பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்க்கு சொந்தமான பிரபல “மல்லிகாஸ்” எனும் மூன்று மாடி சொகுசு ஆடை கடை முற்றாக தீ பிடித்து கருகியுள்ளது. திடீர் தீ அனர்த்தத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சுமார் 10:30 மணி முதல் குறித்த இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதுள்ளதாக நம்பப்படுகின்றது. தீ அணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகையில், ஆடை கடை முழுமையாக எரிந்துள்ளது. கடந்த காலத்தில் அளுத்கம இனக்கலவரத்தின் போது குறிப்பிட்ட கடைக்கு இனவாதிகளால் 2 தடவைகள் தீ…

Read More

அநுராதபுர முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிந்து நாசம்

அநு­ரா­த­புரம் நகரில் அமைந்­துள்ள களுத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியா­பாரி ஒரு­வ­ருக்கு சொந்­த­மான தற்­கா­லிக வியா­பார கொட்­ட­கைக்கு (Sale Centre) நேற்று முன்­தினம் அதி­காலை இனந் தெரி­யாத நபர்­களால் தீ வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிசார் தெரி­வித்­தனர். “லாஸ்ட் சான்ஸ் ” (Last Chance )என்று பெய­ரி­டப்­பட்ட இந்த வியா­பார நிலை­யத்தில் பெறு­மதி வாய்ந்த வர்ண விளக்­குகள் உள்­ளிட்ட பெறு­ம­தி­வாய்ந்த சமையல் உப­க­ர­ணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீயினால் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்ள…

Read More

கடலில் தொலைத்த திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்ற தம்பதி

ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு தம்பதி கடலில் தொலைத்த தமது திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளது. அகஸ்டின் அலியகா என்பவரும் அவரின் மனைவி குவானி சான்செஸும் 1979 பெப்ரவரி 17 ஆம் திகதி திருமணம் செய்திருந்தனர். இத்திருமணத்துக்கு சில மாதங்களின் பின்னர் கடலில் நீந்திக்கொண்டிருந்த போது, அகஸ்டின் அலியகா அணிந்திருந்த மோதிரம் கடலில் வீழ்ந்தது. தேடுதல் நடத்திய போதிலும் அம்மோதிரத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இநநிலையில், கடந்த மாதம் பெனிடோர் நகரில் கரையோரத்தில் சுழியோட்ட…

Read More

இந்தியாவிற்கு உரிய பதிலடி கொடுங்கள் – நவாஸ் ஷரீப்

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று(புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபையில் பேசுவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிடம் பேசி உள்ளார். ஐ.நா.சபையில் பேச உள்ள விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ரஹீல் செரீப்பிடம், நவாஸ் செரீப் பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு திறம்பட பதிலடி கொடுக்குமாறு ரஹீல் செரீபை, நவாஸ் ஷரீப் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Read More

குவைத்தில் சிலிண்டர் வெடிப்பில் இலங்கையர் மரணம்

-ஆர்.கோகுலன் – குவைத்தின் கைதான் நகரில் இடம்­பெற்ற சமையல் எரி­வாவு சிலிண்டர் வெடிப்பு சம்­ப­வத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது. இந்தச் சம்­பவம் இலங்கை பிர­ஜைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. இதில் இலங்கை பிர­ஜைகள் இருவர் பலத்த காயங்­க­ளுக்குள்­ளாகி வைத்­தி­ய சாலையில் சிகிச்சை பெற்று வந்­துள்ள நிலையில் இவர்­களுள் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெலி­மடை குருத்­த­லாவை பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரே உயி­ரி­ழந்­ துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்…

Read More

ஆட்பதிவுத் திணைக்களமும் இடமாற்றம்

கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.

Read More

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை

பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தகுந்த வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அத்துடன் பாராளுமன்ற ஒழுக்கங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை…

Read More

தம்மை விடுதலை செய்ய கோரி துமிந்த மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவர் இன்று கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மேன்முறையீடு செய்துள்ளனர். தமக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கி விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். கடந்த 08ஆம் திகதி தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி தங்களின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தனது சட்டத்தரணி ஊடாக…

Read More