Headlines

இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் Wencai Zhang உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று  முன்தினம் (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும்…

Read More

ரஷ்யா – துருக்கி சர்ச்சை முடிவிற்கு வந்தது

கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அதிபர் ரசிப் தேய்ப் எர்துவன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ கூறியதற்கு பிறகு, கடந்த வாரம், ரஷ்ய அதிபர்…

Read More

ஜாகீர் நாயக்கின் டிவி ஒளிபரப்பை முடக்க ஆலோசனை!

ஜாகீர் நாயக்கின் பேச்சு மற்றும் அவரது பணப்பரிவர்த்தனையை ஆராய முடிவு செய்துள்ளது. அவரது டிவி ஒளிபரப்பை முடக்கவும் ஆலோசனை நடந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து நடந்த 2 தாக்குதல்களில் 25 பேர் பலியானார்கள். இதையடுத்து ஜாகீர் நாயக் பேச்சு மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆராய மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் முடிவு செய்தன. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டுபிடிக்க மகாராஷ்டிரா அரசு 9 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

Read More

“ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா”

புத்தளம் அல்-காசிமி “இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் இடம்பெற்ற “ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்” இன்று (9) மாலை அல் – காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி,…

Read More

உள்விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

வெளிநாட்டு நீதிமன்றத்திற்கோ, நீதிபதிக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ எனது நாட்டின் உள்விவகாரங்களிலும்  நீதித்துறையிலும் தலையிட இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த யுத்த காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதற்கும் அல்லது வெளிநாட்டு யுத்த நீதிமன்றங்களை எந்தவொரு இடத்திலும் எந்த வகையிலும் அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் தாம் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்வரை அதற்கு ஒருபோதும்…

Read More

ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மட்டுமே செயலமர்வில் உள்ளடக்கப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறு…

Read More

3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (இ.எஸ்.ஓ.) எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டது. இங்கு தினமும் 3…

Read More

சவூதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம்? (வீடியோ)

பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் வேற்றுகிரகவாசிகளின் விமானமொன்று சவுதி அரேபியாவில்தரையிறங்கியதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளனர்.பின்னர் தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் சென்றது. தரையிறங்கிய வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்துபோனார். இதன் காணொளி காட்சியம் வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சிவெளியாகியுள்ளது.  இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லதுஇராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில்வெளியிடபட்டுள்ளது.

Read More

இதுவரை 800 மெற்றிக் தொன் கழிவுகள் அகற்றம்

கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் அப் பகுதியில் இருந்து 800 மெற்றிக் தொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எட்டு நாட்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்றிவிட முடியும் எனவும் குறித்த அமைச்சு கூறியுள்ளது. சலாவ இராணுவ முகாமுல் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தின் பின்னர், அப் பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் நிமித்தம் மேல் மாகாண நிர்வாக…

Read More

சீன வெளிவிவகார அமைச்சர்- பிரதமர் சந்திப்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More

ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்

சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகப் புகழ்பெற்ற இந்திய இஸ்லாமிய பரப்புரையாளர் மருத்துவர். ஜாகிர் நாயக்கை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் மத்திய அரசு வெளியிட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக எமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். மும்பையைச் சேர்ந்த மருத்துவரும், இஸ்லாமிய அறிஞருமான ஜாகிர் நாயக், இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களின் வேத நூற்களையும், கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றவர். சமயக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் ஒருமைப்பாட்டை, நுண்மான் நுழைபுலத்தோடு…

Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்

சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More