Headlines

நாச்சியாதீவு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.

Read More

மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மீள்குடியேற்ற கிராமமான மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் இன்று (17) அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது…

Read More

மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில், முசலிப் பிரதேச சபையில் இன்று காலை (17/10/2016) உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், இராணுவ, கடற்படை, வனஜீவராசிகள் திணைக்கள, வனபரிபாலனத் திணைக்கள, நீர்ப்பசானத் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிராம சேவையாளர்களும் பங்குபற்றினர். சுமார் 26…

Read More

ஐ.நா விஷேட அறிக்கையாளர் ரீட்டாவை சந்திக்கும் மக்கள் காங்கிரஸ்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விஷேட அறிக்கையாளர் ஐஷாக் நதேயா அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான தூதுக்குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் சந்திக்கின்றது. இலங்கை அரசியலில் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பில் முஸ்லிம்களுக்கு பலத்த சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளமை குறித்து, மக்கள் காங்கிரஸ் சுட்டிக்காட்டுவதோடு இந்த மாற்றங்களினால்…

Read More

“கிராம இராச்சிய” வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (16.10.2016) மாஞ்சோலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கிராம இராச்சிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உதவி தவிசாளர் நெளபல், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜனாப் தெளபீக், பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழுத் தலைவர் மன்சூர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்

Read More

இலவச சீருடை வழங்கும் வைபவம்

விவசாய வாரம் முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (15.10.2016) புத்தளம் கமநல சேவை நிலையத்தில் நடைபெற்ற சமய நிகழ்வினை தொடர்ந்து நடை பெற்ற  பாடசாலை வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாச புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள்.

Read More

பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் அமீர் அலி

அண்மையில், பால் பண்ணையார்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கருத்தரங்கில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மாகாணசபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் துரைரெட்ணம் மற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

அண்மையில், ECGO அமைப்பினால் Technological Course முடிந்த மாண மாணவிகளுக்கு Certificate Awarding Ceremony நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் MM.நெளபர், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் MLA.ஜுனைட், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் MAM. ஹலீம் இஷ்ஹாக், MBT ஹான் ஆசிரியர் ஆலோசகர் IT, ஆசிரியர் MM. நவாஸ் , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து…

Read More

பால் குளிரூட்டும் நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு

விவசாயிகளிடமிருந்துபால் பால் சேகரிப்பதை இலகுபடுத்தும் முகமாக; மில்கோ நிறுவனத்தினால் கல்குளம், கமரக்குளம் ஆகிய பகுதிகளில் பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பி.ஹரிசன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.

Read More

இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழாவில் இஸ்ஹாக் ரஹுமான் MP

நாட்டில் புதிதாக 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழா நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Read More

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது…

Read More

“எம்மை வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள்” அமைச்சர் றிஷாத்

எம்மைத் தட்டிக்கொடுப்பதற்கு பதிலாக வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள், இதன் மூலம் எனது அரசியல் இருப்பை இல்லாமலாக்க முடியுமென்று தப்புக்கணக்கு போடுகின்றார்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முசலி, வெள்ளிமலையில் நேற்று மாலை (16/10/2016) இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் றிசாத் மேலும் கூறியதாவது, கடந்த 16 வருட காலமாக நான் முன்னெடுக்கும் முயற்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து, கூட்டங்களை கூடிக் கூடி, அவற்றை எவ்வாறு…

Read More