Headlines

ஹொரவபொதான, அல்-அக்ரம் முதியோர் அமைப்பிற்கு உதவி

பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் ஹொரவபொதான பிரதேச செயலகத்திற்குறிய நிகவெவ அல் அக்ரம் முதியோர் அமைப்பிற்கு இரும்பு அலுமாரி வழங்கியபோது.

Read More

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை: அமைச்சர் றிஷாத்தினால் திறந்துவைப்பு!  

கம்பளையில் இயங்கி வரும் மினாரா பூட்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை மற்றும் அலுவலகத் தொகுதியை உலப்பனை கைத்தொழில் பேட்டையில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார். நிறுவனத்துக்கென தனியான இணையத்தளம் ஒன்றையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார். 2010 ஆம் ஆண்டு கம்பளை, மலபார் வீதியில் ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட இந்த நிறுவனம், இன்று அதனை விரிவாக்கிக்கொண்டு, உற்பத்தித் துறையில் தன்னிகரற்ற ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. கைத்தொழில், வர்த்தக அமைச்சின்…

Read More

காவத்தமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற முப்பெரும் விழா

காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற முப்பெரும் விழாவில்  பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீரான் ஹாஜி, புகாரி ஹாஜி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியாளர் சசிநத்தன், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலத்தின் அதிபர் பிர்தௌஸ்,…

Read More

“ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி” வருடாந்த பொதுக் கூட்டம்

அண்மையில் இடம்பெற்ற, ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அஸ்மி, சட்டத்தரணி ராசிக் , கலாச்சார உத்தியோகத்தர் பீர்முஹம்மட் மொளலவி, அஸ்ரப் தபால் அதிபர் மாவடிச்சேனை, மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் ரெயில்வே குடியிருப்பாளரின் பிரச்சினைகள் குறித்து…

Read More

புத்தளம் நுரைச்சோலையில் பிராந்திய பொலிஸ் நிலையம்

இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு புத்தளம் நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்) பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபர் பூஜித வெயசுந்தர அவர்களின் தலைமையில் நேற்று (18) மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களும், அமைச்சர் பலித்த ரங்க்கே அவர்களும், புத்தளம் மாவட்ட அதிபர் உட்பட இன்னும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

Read More

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  இடம்பெற்ற கொடூர யுத்தம் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வடமாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே பீதியின் காரணமாக வெளியேறி, தமது சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தென்னிலங்கைக்கு வந்து குடியேறினர். தமிழ் மக்களில் அநேகர் யுத்தக்கோரத்தைத் தாங்கமுடியாமல் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். மொத்தத்தில் எல்லா சாராரும் பாதிக்கப்பட்ட போதும், வடக்கிலே…

Read More

அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் வழங்கும் நிகழ்வு

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கலாவெவ, அமுனவெட்டிய அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் (ஹட்) வழங்கும் நிகழ்வின் போது.

Read More

ஆசிரியர் விடுதிக்கான அடிகல் நாட்டு விழா

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்குமிட விடுதிக்கான அடிகல் நாட்டு விழா நேற்று (17) நடைப்பெற்றது.  இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் முசலி பிரதேசசபை உப தவிசாளர் பைரூஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

Read More

அமைச்சர் றிஷாத் வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது

மன்னார் மாவட்டத்தில் யுத்தகாலத்தில் தூர்ந்துபோன குளங்களை புனரமைப்பதற்கு அண்மையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கு அமைய,  அமைச்சர் றிஷாத் நேற்று (17) வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது…

Read More

ஊடக அறிக்கை: உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்திற்குப் பதிலாக (P.T.A.), பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை(C.T.A)–((Counter Terrorism Act))கொண்டுவர உத்தேசித்துள்ளது. இப்புதிய சட்டம் தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்க்கும்,உத்தேசித்துள்ள புதிய சட்டத்திற்குமிடையில் (C.T.A.) எந்தவித வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. புதிய சட்டத்திற்கான முயற்ச்சிகளை முதன் முதலில் எதிர்த்தவர் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.அவரது முயற்சி தொடர வேண்டுமென்றும் விரும்புகின்றோம்.                                            உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது முஸ்லீம்களை இலக்காக வைத்து இயற்றப்படுகின்றதா? என்ற சந்தேகம் முஸ்லீம்…

Read More

ஊடக அறிக்கை; முஸ்லிம் தனியார் சட்டம்

  விவாகம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய முஸ்லிம் தனியார் சட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றங்களை கொண்டுவர சில பெண்ணிய அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.முஸ்லீம் தனியார் சட்டம் என்பது இறைவனாலும் இறை தூதராலும் வகுக்கப்பட்ட சட்டங்களுக்கமைய தொகுக்கப்பட்ட முஸ்லீம்களுக்கான வாழ்க்கை முறையாகும்.நவீன நாகரீகமானவர்கள் என்றும் அதி உயர் கல்வித்தகைமை பெற்றவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கும் ஒருசில பெண்ணிய வாதிகள் மேற்கூறிய “ஷரியா” என்னும் இஸ்லாமிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர நினைப்பது, இறைவனுக்கும்,இறைத்தூதருக்கும் தெரியாதவற்றை…

Read More

இலங்கை அரசும் – பலஸ்தீனமும்

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும் அவை முஸ்லிம்களின் பொதுச்சொத்துக்கள் என்றும் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஆதரவளிக்காமல் விலகி நின்றமை முஸ்லிம்களுக்கு ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் அத்துமீரல்களையும் – மனித உரிமை மீறல்களையும் – அடாவடித்தனங்களையும், நன்கு அறிந்துள்ள இலங்கை அரசு இஸ்ரேலிற்கு எதிரான இந்த பிரேரணைக்கு வாக்களிக்காமல் விலகி நின்றமை இஸ்ரேலின் அத்துமீறல்களை…

Read More