Headlines

LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் நியமிப்பு

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,மெட்றோ போலியன் கலாசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள். லங்கா அசோக் லெலன்ட் நிறுவனத்தின் LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக வர்த்தக கைத்தொழில் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவருமான கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால். 12/10/2016இல் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

மனற்குன்று பிரதேசத்தில் நிரந்தர வீட்டினை வழங்க நடவடிக்கை

நேற்று முன்தினம் (11.10.2016) இரவு மனற்குன்று பிரதேசத்தில் வீடோன்று எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இதனை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட பிரதான அமைப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் அலி சப்ரி, கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து நிரந்தர வீட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

Read More

ACJU – கண்டிகிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டி கிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இன்று காலை (13) இடம்பெற்ற சந்திப்பின்போது.

Read More

பெரிய ஹஸ்ரத்தின் மறைவு எமக்குப் பேரிடியாக அமைந்து விட்டது – அமைச்சர் றிஷாத்

“பெரிய ஹஸ்ரத்” என எல்லோராலும் அன்பாகவும், உரிமையுடனும் அழைக்கப்படும் காத்தான்குடி அப்துல்லா ஹஸ்ரத்தின் மறைவு, இஸ்லாமிய உலகுக்கு குறிப்பாக, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஆன்மீகப் பணிக்காக இலங்கை வந்த பெரியார் அப்துல்லாஹ் ஹஸ்ரத் காத்தான்குடியில் ஜம்இய்யதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை. இலங்கையில் முதன் முதலாக ஹாபிழ்களை உருவாக்கும் குர்ஆன் மனனப்பிரிவை ஆரம்பித்து, பன்னூற்றுக்கணக்கான இஸ்லாமிய…

Read More

இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் மறைவு

இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று மாலை காலமானார். பெரிய ஹஸ்ரத் என காத்தான்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் தென் இந்தியாவின் காயல் மாநகரம் அருகே அமைந்திருக்கும் அதிராம் பட்டிணத்தில் பிறந்தாலும் அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை காத்தான்குடியில் கழித்துள்ளார். காத்தான்குடி மண்ணில் பல்துறை சார் அறிஞர்களை உருவாக்குவதில் முன்மாதிரி மிக்க பங்களிப்பொன்றை வழங்கியிருந்தார்.. பிறந்த மண், குடும்பம், உறவுகள் அனைத்தையும் துறந்து…

Read More

ACMCயின் கைத்தொழில் பேட்டையை தடுத்தமை கண்டிக்கத்தக்கது – NDPHR

அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் கொண்டுவர பட்ட கைத் தொழில் பேட்டை சம்மாந்துரையில் அமைப்பதுக்கான முயட்சியை சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தியது உண்மையிலேயே மிக கண்டிக்கத்தக்க விடயம் மட்டும் அல்ல எதிர் காலத்தில் முஸ்லீம் சமுதாயமே ஒரு பொருளாதார பின்னடைவை அடையும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் . அரசியலில் பகைமை இருக்கலாம் ஆனால் சமுதாயத்துக்கு ஒரு அபிவிருத்தி வரும் போது அதை எல்லோரும் அரசியலுக்கு…

Read More

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம், முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும்’

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக அறி­மு­கப்­ப­டுத்தப் பட­வுள்ள புதிய சட்ட ஏற்­பாடு முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­படுத்தும் வகையில் அமை­ய­வுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சட்­டப்­பி­ரிவின் பணிப்­பாளர் சட்­டத்த­ரணி றுஸ்தி ஹபீப் தெரி­வித்தார். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றீ­டாக அறி­மு­கப்­ப­டுத்தப் பட­வுள்ள  சட்ட ஏற்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்குப் பதி­லாக மற்­று­மொரு சட்ட ஏற்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு  அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதற்­கான சட்ட வரைபுப்…

Read More

ஆசிரியர் தின நிகழ்வு வ/ தாருல் உலூம் வித்தியாலயத்தில்

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் ஜீனைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சரின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி, கிராம சேவகர் சிம்சார், செட்டிகுளம் பிரதேச உலமா சபை தலைவர் மெளலவி நெளபான் ஆகியோரும். அவர்களோடு இணைந்து அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். இந்…

Read More

மல்வத்து ஓயா, வியாயடிக்குளம் உள்ளிட்ட தூர்ந்து போன குளங்களை புனரமைப்பதற்கு தீர்மானம்!

யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தூர்ந்து போன மல்வத்து ஓயா மற்றும் வியாயடிக்குளம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனக் குளங்களை உடனடியாகப் புனரமைத்து, அந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாய முயற்சிகளையும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதியளித்தார். கைத்தொழில், வணிகத்துறை அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினருக்கும், அமைச்சர் விஜிதமுனி சொய்சாவுக்குமிடையில் இடம்பெற்ற நீண்டநேர கலந்துரையாடலின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதுடன்,…

Read More

புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர் மௌலவி எஸ். எச். எம்.ஏ (முபாரக்) தலைமையில் இடம்பெறும் இந்தத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கௌரவ விருந்தினர்களாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக்,…

Read More

நடைமுறைகளைப் பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்கள் பணியாற்றுகின்றன

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கெ.பி.தென்னகோன் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் எதனோல் வியாபாரம் செய்பவரும் அல்ல. இந்த விடயத்திலும், அமைச்சருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அவர் மேலும் கூறினார். கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் (11/10/2016) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்…

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐ.நா. அறிக்கையாளரிடம் கையளிப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் றீட்டாவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் (10.10.2016) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சந்தித்தனர். இதன்போது இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் RRT சட்டத்தரணிகள் அமைப்பின் மூலம் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அரசியலமைப்பு சீர்திருத்தம், தனியார் சட்டம், தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், மும்மண்ண முஸ்லிம் பாடலை மைதான விவகாரம், அழுத்தகம…

Read More