தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின் மத உரிமைகளை மீறும் விதத்தில், சிங்கள – பௌத்த குடியாட்டங்கள் ஏதும் இல்லாத, முஸ்லிம்களும் தமிழர்களும் செறிந்து வாழும் பிரதேசங்களில் பலவந்தமாக புத்த சிலைகளை அமைப்பது இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு இடையூறாக இருப்பது மாத்திரமன்றி மதக்கலவரங்களுக்கும் வழிவகுக்கும் சந்தர்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமையும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, “இறக்காமத்துக்கு”…
