Headlines

நாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஒழிக்க புதிய வேலைத்திட்டங்கள்

நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் அளவானது இந்த வருடத்திற்குள் 70 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள்கள் ஊடாக அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கசல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தத்தமது பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அன்றாடம் பிரதேசத்தின்…

Read More

மலேசிய மாநாட்டில் அமைச்சர் றிஷாத் உரை

அமைச்சின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் இன்று (05/09/2016) ஆரம்பமான பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்று அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் இடம்பெற்ற “நிலைபேறான பொருளாதார முன்னேற்றம்” என்ற கருப்பொருளிலான  இரண்டாவது நிகழ்விலும் அமைச்சர் உரையாற்றினார்.

Read More

இலங்கைத்தூதுவர் மீதான தாக்குதல்: வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

மலேஷியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மலேஷியாவுக்கான உயர்ஸ்தானிகர் மீது கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான உயர்ஸ்தானிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல்களை நடாத்தியவர்களை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகளை நடாத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தாக்குதல் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக  இலங்கை…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை: 8 பேருக்கு விளக்கமறியல்

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

2050ல் பூமியில் பாதி காணாமல் போய்விடும்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்து வந்தால் 2050க்குள் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போதிருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் பூமி தப்பும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னும் 33 வருடங்களில் பூமியிலிருந்து 8 லட்சம் உயிரினங்கள்…

Read More

மீண்டுமொரு முஸ்லிம் வர்த்தகரை காணவில்லை

பண்டாரகம – அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின் பொருட்டு தனது குழுவினருடன் நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். நேற்று -04- முதல் இன்றுவரை அவருடனான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும், எனவே இவர் காணாமல் போயிருக்கலாம் என அவரது தந்தை பண்டாரகம பொலிஸ்…

Read More

எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் சுமார் எட்டு லட்சம் பேர் தமக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என…

Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயார்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது தொடர்பாக அறிவுறுத்தலுடன்,துஸ்பிரயோகங்களின் போது சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முறைகள் தொடர்பான நடவடிக்கைகயை அறிமுகப்படுத்தல் என்பனவே இந்த கொள்கைகள் தயாரித்ததன் நோக்கம் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது தேசிய மற்றும், மாகாண சபை மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவளை சிறுவர் பாதுகாப்பு…

Read More

134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

சவுதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று காலை (05) நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

நாடு திரும்பினார் மஹிந்த!

மலேசியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று காலை 10.30 மணிக்கு மலேசியா விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 319 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் மலேசியா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒற்றையாட்சி முறைமைக்குள் புதிய அரசியலமைப்பு

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒற்றையாட்சி முறைமைக்குள்  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற விசேட பிரேரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்தார். இதன்போது ஏழு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பாதுகாக்கும் செயற்திட்டத்தை பாராட்டியும், இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைத்தல், இன நல்லிணக்கம் ஏற்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதன்போது அமைச்சர்  பிரேம்ஜயந்த மேலும்  உரையாற்றுகையில், ஒற்றையாட்சிக்குள்…

Read More

சகவாழ்வை ஏற்படுத்துவோம் – அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More