Headlines

அபிவிருத்திப் பாதையை நோக்கி தில்லையடி அல்ஜித்தா கிராமம்

-சுஐப் – இன்று அழகிய கிராமமாக காட்சி தரும் புத்தளம் தில்லையடி அல் ஜித்தா கிராமம் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட தென்னந்தோட்டமாக புல்லும் புதரும் நிறைந்து காணப்பட்டது. உட்செல்ல முடியாது ஆங்காங்கே முட்கள் நிறைந்த உடைமரங்கள் காணப்பட்டன. மழைக்கால நீர்தேங்கி ஆங்காங்கே சிறு நீர்நிலைகளும் காணப்பட்டன. வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்த விடத்தல்தீவு, பெரியமடுவைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் இக்காணியை வாங்கித் திருத்தம் செய்தனர். தமக்கான வீடுகளை இக்காணியில் அமைத்தனர். “அல் ஜித்தா” எனக் கிராமத்துக்கு பெயரிட்டனர்….

Read More

தாஜூடின் வழக்கு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

றக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட  குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

மஹிந்தவின் முன்னாள் செயலாளரின் கடவுச்சீட்டு விடுவிப்பு

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவருக்கு செயலாளராக கடமையாற்றிய லலித் வீரதுங்கவின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் 100 இலட்சம் ரூபா பிணை அடிப்படையில் கடவுச்சீட்டை விடுவிக்க இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் லலித் வீரதுங்கவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

போகிமான் கோ விளை­யாடிக் கொண்டு சென்­றவர் 3 கோடி பணத்தைக் கண்­டெ­டுத்து அதிகா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்­தார்

போகிமான் கோ (Pokemon Go)விளை­யாட்டில் ஈடு­பட்­டுக்­கொண்டு வீதியில் சென்ற நபர் ஒருவர் 2 இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 3 கோடி ரூபா) கண்­டெ­டுத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. நியூ ஜேர்ஸி மாநி­லத்­தி­லுள்ள ஹெக்ஸ்­டவுன் நகரில் போகி­மான்­களை பின் தொடர்ந்து சென்ற ஒருவர், வர்த்­தக நிலை­மொன்­றுக்கு அரு­கி­லி­ருந்து 2000 டொலர்­களை கண்­டெ­டுத்தார். அந் ­நபர் உட­ன­டி­யாக இது தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­த­தாக ஹெக்ஸ்­டவுன் பொலிஸார் தெரி­வித்­தனர். அதை­ய­டுத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை அதி­கா­ரிகள் அங்கு அனுப்­பினர்….

Read More

தலைக்கவச விவகாரம்: தடை நீடிப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை மீதான இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் அமைந்துள்ள தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடை விதித்தனர். பின்னர், இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, குறித்த தடையை அமுல்படுத்துவக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பில் தாக்கல்…

Read More

19 மீனவர்கள் கைது

கொக்குத்துடுவை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த 19 மீனவர்கள் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 4 கண்ணாடிநார் படகுகள் மற்றும் 3 தங்கூசி வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Read More

இஸ்லாமிய பொருளாதாரம் குறித்து உலகம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன – ரணில்

1970 களில் பொரு­ளா­தார விடு­த­லைக்­கான முன்­னோ­டி­யாக இஸ்­லா­மிய பொரு­ளா­தா­ரமே இருந்­தது. எனவே  இன்று இஸ்­லா­மிய சமூ­கத்தின் பொரு­ளா­தார முறை­மைகள் தொடர்பில் உலகம் அறிய வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். இந்­தோனே­ஷி­யாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறு­கையில், இந்­தோ­னே­ஷியா பல இயற்கை பாதிப்­புக்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ள நிலையில் இன்று நடை­பெறும் இந்த மாநாடு உலக அளவில் முக்­கி­ய­த்துவம்…

Read More

குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

களனி கங்கையில் குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை…

Read More

ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை…

Read More

தாய்ப்பால் ஊட்டுதலில் இலங்கை முதலிடத்தில்

தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பில் பன்னாட்டு ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கை முதலிடம் பெற்றது. 121 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித்த மகிபால தெரிவித்தார். இலங்கையில் பாலுாட்டும் தாய்மார் தற்போது 92 வீதமாகக் காணப்படுகின்றனர். குழந்தைகளுக்கான பால்மா தொடர்பான பல்வேறு விளம்பரங்களால் இந்த வீதம் குறைவடைகின்றது. அனைத்துத் தொழில் நிறுவனங்களும்  தமது ஊழியர்களுக்கு பாலுாட்டுவதற்கான நேரத்தை வழங்க வேண்டும் என்று பாலித்த மகிபால குறிப்பிட்டார். இந்த ஆய்வில் கியுபா…

Read More

பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவுக்கு பிடியாணை

பாடகர் எம்.ஜீ.தனுஷ்கவை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் அவரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் – மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இவர்கள் ரயில் பாதையை மறித்து…

Read More