Headlines

பம்பலப்பிட்டி வர்த்தகரை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். நிலையில் அவரின் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் 5 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக வர்த்தகரின் தந்தையார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்த்தகரின் தந்தை – 0770101971 முன்னைய செய்தி: கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

Read More

பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர். நேற்று முன்தினம் (22) இரவு இடம்­பெற்ற இந்த மோதல் குறித்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய பேரா­தனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விஷேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது. காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் உள்ள மாண­வர்­க­ளி­டமும் பேரா­தனை பல்­க­லையின் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள்…

Read More

தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்புள்ள சந்தேக நபர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசு,  தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும் என்று பல முறை கேட்டும் பயனில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் கூறி வருகிறது. எனவே, இது தொடர்பாக இந்தியா ஐ.நா. சபையில் புகார் கூறியது. மேலும் அவன் வசிக்கும் 9 முகவரிகளை கண்டுபிடித்து அதன் ஆதாரத்தையும் ஐ.நா….

Read More

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பூமியதிர்ச்சி ரோமினும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 6.1 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வேண்டும்!

-லியோ நிரோஷ தர்ஷன் – புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டவர்களின் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில்  காணாமல் போனோர் குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள  பரிந்துரைகளை  சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு முரணான வகையில்  இந்த  பரிந்துரைகள்  அமைந்துள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

Read More

அவசரப்பட வேண்டாம் : அரசாங்கம்

-ஆர்.யசி – பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே காணாமால் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது தொடர்பான பொறிமுறைகள் சரியான பலமடையும் வரையில் எவரும் அவசரப்பட வேண்டாம். இந்த ஆட்சியில் உண்மைகள் கண்டறியப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டது. காணாமால் போனோர்  அலுவலக   சட்டமூல உருவாக்கத்தில் மக்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க செயலணி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.    இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரும்…

Read More

137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்   குறிப்பிட்டார். இது தொடர்பில்  அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய…

Read More

1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடி – இராதாகிருஸ்ணன்

நுவரெலியா மாவட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மோசடியான முறையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று பரீட்சை மோசடிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேசிய அடையாள அட்டைகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 305 மாணவர்கள் கணித பிரிவிலும், ஏனையவர்கள் வர்த்தக பிரிவிலும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் 25…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

சாதாரண தரப் பரீட்சையில் ஆக்ககூடிய புள்ளிகளைப் பெற்ற 12 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற 12 மாணவர்கள் இன்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களையும் விருதுகளையும் பெறவுள்ளனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என கல்வியமைச்சின் பாடசாலை அலுவல்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டபிள்யு.கே.எம்.விஜயதுங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வருடந்தோறும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு.விஜயதுங்க கூறினார். இன்றைய பரிசளிப்பு விழாவில் கல்வியமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்பார்கள். இதற்கு மக்கள் வங்கியும் தனியார் நிறுவனங்களும் அனுசரணை…

Read More

தலைவிரித்தாடும் இனவாதம்

இலங்கை  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை ஆதரித்திருந்தார்கள்.இதில் பேரின மக்கள் நாட்டின் பொது விடயங்களில் மஹிந்த ராஜ பக்ஸவின் போக்கை ஏற்றுக் கொள்ளாது அவரை எதிர்த்திருந்தனர்.இன்றுள்ள ஆட்சி மலர்ந்ததன் பிற்பாடு பத்தொன்பதாம் சீர் திருத்தம்,அரசியலமைப்பு மாற்ற முயற்சி,ஊழல் செய்தோரை குறைந்தது விசாரனைக்காவது அழைக்கின்றமை போன்ற விடயங்களில் இவ்வரசு பூரண திருப்தியுறும் வகையில் செயற்படாது போனாலும் இதையாவது செய்கிறார்களேயென மனதைத் தேற்றிக் கொள்ளும் வண்ணம் செயற்படுகிறது….

Read More