3 வயதில் அல்குர்ஆனை, மனனம்செய்த இரட்டை சகோதரர்கள்!
இந்தேனேசியவில் இடம்பெற்ற மாநாட்டில் மூன்று வயதில் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் அங்கு குர்ஆனை ஓதி காண்பித்தார்கள். இந்த இரட்டை சகோதர்ர்களையும் கொளரவித்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்தேனேசியவில் இடம்பெற்ற மாநாட்டில் மூன்று வயதில் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் அங்கு குர்ஆனை ஓதி காண்பித்தார்கள். இந்த இரட்டை சகோதர்ர்களையும் கொளரவித்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.
வருடாந்தம் 2500 புற்றுநோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், தினமும் ஆறு வாய் புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஆயிரத்து 888 ஆண்களும், 534 பெண்களும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெற்றிலை, புகையிலை, புகைத்தல் மற்றும் மதுபானம் போன்ற காரணங்களினால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. வாய் புற்றுநோய் தொடர்பான நோய் குணங்குறிகளை அறிந்துகொள்ள தேவையான வசதிகளை சிகிச்சை…
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறந்த ஏற்றுமதியாளர் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் திறமையை வௌிப்படுத்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்டர் எஸ் யாப்பா தலைமையில் அமைந்த குழு சிறந்த ஏற்றுமதியாளர்களை தெரிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 312 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியில் 302 மில்லியன் டொலர் நிதி செயற்றிட்ட கடன் தொகையாகவும், எஞ்சிய தொகை நேரடி உதவியாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிதியுதவித் தொகையில் பெரும் பகுதி சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 25 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று (8) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்னோ சாலையில் மங்கள் சவுக் அருகில் சென்றபோது அவரது காரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சக வழக்கறிஞர்கள் குவெட்டா…
கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது. இதன்போது, உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன. இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற…
-எம்.ஆர்.எம்.வஸீம் – பொரலஸ்கமுவ ஜும் ஆப் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்தேன். பொலிஸ்மா அதிபர் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் (6) மாலை சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார். பள்ளிவாசல் மீது தாக்குதல் இடம்பெற்ற செய்தியை கேள்வியுற்று அங்கு சென்றிருந்த…
-சுஐப் எம்.காசிம் – பெரும்பான்மை இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கிலே கடந்த ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழர்களும், முஸ்லிம்களும் தற்போதைய நல்லாட்சியிலும் ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்து, தொடர்ந்தும் நல்லுறவு பேணவேண்டியது காலத்தின் தேவையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக் எழுதிய “முஸ்லிம் அரசியலின் இயலாமை” என்ற நூல் வெளியீட்டு விழா, கொழும்பு வை.எம்.எம்.ஏ அரங்கில் நேற்று மாலை (07/08/2016) இடம்பெற்ற போது பிரதம…
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று (8) பிற்பகல் ஈடுபடவுள்ளனர். குறித்த திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரியதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…
தமது கோரிக்கைகளுக்கு இன்று (8) எழுத்து மூல தீர்வு கிடைக்கலாம் என, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வேலை…
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -அல்மதத் யா றஸுலல்லாஹ்- நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى القربي நபீயே! நீங்கள் கூறுவீராக. உறவினர்களில் அன்பு வைப்பதைத் தவிர வேறு எந்த ஒரு கூலியையும்…
முஸ்லிம் மக்களுக்கு நிர்வாக அலகொன்றை தந்து விட்டு வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற வடமாகாண சபை விக்னேஸ்வரனின் பேச்சை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபை முதல்வரே தவிர அவர் கிழக்குக்குரியவர் அல்ல. அதனால் அவர் வடக்கின் அபிவிருத்தி பற்றி பேச வேண்டுமே தவிர கிழக்கை இணைக்கும் பேச்சை தொடர்வதை அவர் நிறுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் ஒரு நிர்வாக அலகு என்பது மிட்டாயை கொடுத்து கண்களைப்பறிக்கும் முயற்சியாகும்….