Headlines

தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம்

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் அண்மையில் (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, ஒன்லைன் தொழிநுட்பம் மூலம் கலந்து கொண்டார். கடற்படை தளபதியின் ஒரு எண்ணக்கருவில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறனைக் கொண்டு இந்நீர் சுத்திகரிப்பு…

Read More

மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் (29) திறந்து வைக்கப்பட்டது. மூதூரிற்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தேர்தல் தொகுதி மக்கள் தமக்கு பெருமளவு ஆதரவு வழங்கியதாகவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதூத்து அவற்றை பலப்படுத்துவதற்கு தேவையான வசதி வாய்ப்பக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் மக்கள் தம்மை ஜனாதிபதியாக்க பல காரணங்கள் இருந்ததாகவும் அவற்றுள் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாத்து பலப்படுத்துவது…

Read More

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்

மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்பளங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(31) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்ச்சித்திட்டம் பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,…

Read More

சீன பிரமுகர்களுடன் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணங்கவே கடன் பரிமாற்றங்கள்

சீன கடன்கள் பற்றிய கடன் பங்குமுதல் பரிவர்த்தனை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் 7, 8 ஆம் ஆகிய திகதிகளில் பீஜிங் நகரில் சீன குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங், மற்றும் பிரதமர் லீ கெகியங் ஆகியோருடன் நடாத்திய கலந்துரையாடலுக்கு அமையவே அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அக்கலந்துரையாடலின்படி முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த கருத்திட்டம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் தனியார் – அரச பங்காண்மை ஒன்றில் ஈடுபட விரும்புகின்ற சீன நிறுவனங்களை சீன…

Read More

பிரதமர் இன்று இந்தோனேஷியாவுக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(01) இந்தோனேசியாவிற்கு புறப்படவுள்ளார். இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்தே அவரது இவ்விஜயம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனோசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo), நிதியமைச்சர் சிறி முல்ஜானி இந்திரவதி (Sri Mulyani Indrawati), கடல்வலயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட…

Read More

எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இரு பிரதான கட்சிகளை உள்ளடக்கி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியை பிளவுப்படுத்த நினைக்கும் எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மேலும் பாதயாத்திரை எனும் பெயரில் மக்களை திசைத்திருப்பி தனிப்பட்ட சில நபர்களுக்காக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி…

Read More

மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர்  பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும்  தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன் அவர்…

Read More

மஹிந்த அணியினர்க்கு மைதானம் மறுப்பு

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதிநாளான இன்று பாதயாத்திரை கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுக்கூட்டத்துக்கான மைதானம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. காலை ஒன்பது மணியளவில் கிரிபத்கொடை நகரில் இருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சி முன்னர் தீர்மானித்திருந்தது. அதற்காக வாசுதேவ நாணயக்கார பெயரில் கொழும்பு ஹைட்பார்க் மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஹைட்பார்க்…

Read More

“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”

“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை. இந்த பாதயாத்திரையின் நோக்கம்  மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர். ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்….

Read More

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்!

-சுஐப் எம்.காசிம் – உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் றிசாத் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக அங்கு இடம்பெற்ற கண்காட்சியையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கல்லூரியின் அதிபர் மௌலவி அஷ்ரப் முபாரக் அல் ரஷாதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

இன்று முதல் குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின்  பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒரு குளிர்பான போத்தலுக்குள் 2-11 கிராம் சீனி மாத்திரம் அடங்கியிருந்தால் மஞ்சல் நிற குறியீடு…

Read More

6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை

-ரெ.கிறிஷ்­ணகாந் – மாவ­னல்ல கங்­துன பிர­தேச பாட­சாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாண­வர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதி­தாக வந்த மாண­வியை பல்­க­லைக்­கழக பாணியில் பகி­டி­வதை மேற்­கொண்­ட­மைக்­காக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆறாம் தரத்­துக்கு புதி­தாக வந்த மாணவி ஒருவர் அணிந்­தி­ருந்த சீரு­டையை, அங்­கி­ருந்த மாண­வர்கள் சிலர் இரண்­டாக கத்­த­ரித்து விட்டு, பின்னர் மாண­வர்கள் மத்­தி யில் நடந்துவரு­மாறு பணித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து, குறித்த மாணவி இது தொடர்பில் பாட­சா­லையின் அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். அதன்­பின்னர் பகி­டி­வதை புரிந்த மாண­வர்­க­ளிடம் அதிபர்…

Read More