Headlines

மஹிந்தவும் நாமலும் ஒரே சிறையில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூங்குவதற்கான துணி மட்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி…

Read More

முஸ்ஸமிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

முஸ்லிம்கள் குறித்த, நாட்டு மக்களின் பார்வை மாறிவிட்டது – அமில தேரர் (வீடியோ)

மஹரகம வைத்தியசாலைக்கு பெட் ச்கேன் பெற்று கொடுக்கும் நோக்கம் நிறைவடைந்து அடுத்தக்கட்டம் தொடர்பில் ஆராயும் விருந்துபசார கலந்துறையாடலில் முக்கிய பிரமுகர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு அமில தேரரின் உரை https://www.youtube.com/watch?v=ZOJTTQKaPMM&feature=youtu.be மொஹம்மதின் உரை https://www.youtube.com/watch?v=6JnafVqUB38&feature=youtu.be 

Read More

பயங்கரவாதி அசின் விராதுடன் ஞானசாரர் செய்த, உடன்­ப­டிக்கை நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­துங்கள்

-விடிவெள்ளி ARA.Fareel- பொது­ப­ல­சேனா அமைப் பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரும் மியன்­மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்­டுள்ள உடன்­ப­டிக்கை உட­ன­டி­யாக  நாட்­டுக்கு அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இரு நாடு­க­ளிலும் தற்­போது நடை­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிப்­ப­தற்கும் பள்­ளி­வா­சல்­களை அழிப்­ப­தற்கும் இரு­வரும் உடன்­பட்டு உடன்­ப­டிக்கை செய்து கொண்­டுள்­ள­தாக அறி­யக்­கி­டைத்­துள்­ளது என ஜாதி­க­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லா­ளரும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்­துள்ளார். வட்­ட­ரக்க விஜித தேரர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள…

Read More

கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதே எனது இலக்கு – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம் – கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்கொம் (INCOM -2016) என்ற தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சியை ஆகஸ்ட் 26 – 30 வரை நடாத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்கொம் கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட…

Read More

வாக்குமூலம் வழங்க வந்தார் சத்தாதிஸ்ஸ தேரர்

சொந்த தேவைகளுக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் 7 அரச வாகனங்களை பெற்றுகொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (13) காலை வருகை தந்துள்ளார்.

Read More

றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமைச்சரவையின் உபகுழுக் கூட்டம் இன்று காலை (12/07/2016) நடைபெற்றபோது அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹகீம், தயாகமகே ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே, இந்த சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். இந்த மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அமைச்சர்கள், நிதி அமைச்சர் ரவியிடம் எடுத்துரைத்தனர்….

Read More

இந்தியாவின் நடைமுறையைப் பின்பற்றி ஆகக்கூடிய சில்லறை விலை

-சுஐப் எம் காசிம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று மாலை தெரிவித்தார். “வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை” விளக்கும் செய்தியாளர் மாநாடு நிதியமைச்சில் இடம்பெற்ற போது பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஸன், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…

Read More

சிறுவனை தூக்கி, பறந்துசெல்ல முயன்ற கழுகு (படங்கள்)

மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல…

Read More

தென்கிழக்குப் பல்கலை பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

-கலாபூசணம் – மீரா.எஸ்.இஸ்ஸடீன் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 96/97 கல்வி ஆண்டில் கல்வி கற்று 2002ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலை,கலாசார பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களின் குடும்பத்துடனான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 2016.07.16ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில்; பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க உத்தியோக பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற உள்ளது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப்…

Read More

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்  கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படவுள்ளதாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒரே…

Read More

தலைமன்னார் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Read More