Headlines

சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் செல்ல தடை

அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இராணுவ முகாமிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடத்தவும் கண்காணிக்கவும் இரண்டு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

குமார வெல்கமவின் மனு ஒத்திவைப்பு

தன்னைக் கைது செய்வதை தடுப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் பாகங்கள் சில கொள்வனவு செய்யப்பட்ட வேளையில் மோசடி இடம்பெற்றதாகக் கூறி குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்வதற்கானநடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அதற்கான தடை உத்தரவை வழங்கமாறு கோரியே குமார வெல்கம நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை…

Read More

பொலிஸாருக்கு எதிராக உதயகம்மன்பில முறைப்பாடு

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து அவரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து, அவர்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார். தன்னை கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், 50 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுமே நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல்செய்துள்ளார். மேலும் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவின்…

Read More

ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

நிதியமைச்சரின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர , இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமொன்றினை அளிக்க சமூகமளித்துள்ளார்.

Read More

மக்களையும் ஏமாற்றி வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வங்குரோத்து தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடே கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நிறுவனங்கள், தனது கட்சியின் எம்.பியான அலிஸாஹிர் மௌலானாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கொண்டுவரும் பொய்யான பரப்புரையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், தேசிய இளைஞர் மகளிர் விவகார இன ஒருமைப்பாட்டு பணிப்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார். பொய்களாலும் புரட்டுக்களாலும், போலியான வாக்குகளாலும் தனது ஆதரவாளர்களையும், மக்களையும் ஏமாற்றி வரும் இந்தக் கட்சி, மக்களை பிழையான வழியில்…

Read More

කලකාරුවන් සහ මාධ්‍යවේදීන් සාමවිනිසුරු තනතුරෙන්  ලබයි 

– -නිලුපුලී –  ශ්‍රී ලාංකීය කලාව පෝෂණය කිරීමෙහි ලා ඇප කැප වූ සිනමාවේදීන්, ටෙලිනාට්‍යවේදීන්, නළු නිළියන්, ගායක ගායිකාවන් කාර්මික ශිල්පීන් ඇතුළු කලාකරුවන් හා ලාංකීය සමාජ සන්ධ්වනියේ ඉහලම ස්ථරයේ සිටින  ජනමාධ්‍යවේදීන් ඇතුළු කලාකරුවන්ගේ හා මාධ්‍යවේදින්ගේ සේවය අගයමින් සමාජයේ ගෞරවනීය තනතුරක් වන  සාමවිසුරු පදවි ඔවුන්ට  පිරිනැමීමට රජය  තිරණය කර තිබේ. ජුනි 13 වෙනිදා අධිකරණ අමාත්‍ය ආචාර්ය විජයදාස…

Read More

97 ஆவது இடத்தைப் பிடித்தது

பூகோள அமைதிச் சுட்டியில், சிறிலங்கா ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வரும், பூகோள அமைதிச் சுட்டி-2016 (Global Peace Index) என்ற தரவரிசைப் பட்டியலிலேயே சிறிலங்கா 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 163 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறிலங்கா 18 இடங்கள் முன்னேறியிருக்கிறது. இந்தப் பட்டியலில், மிகவும் அமைதியான நாடாக- ஐஸ்லாந்து முதலிடத்தில்…

Read More

முன்பள்ளி மாணவர்களின் கல்வியில் கூடுதல் கரிசனை வேண்டும்!

-திருமலை அரசாங்க அதிபர் தெரிவிப்பு- 2015 ஆம் ஆண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. முன்பள்ளி மாணவர்களின் கல்வி தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுவதாகவும் முன்பள்ளி ஆசிரியைகள் முன்பள்ளி தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்வது இன்றிமையாயதது என்றும் நாட்டின்…

Read More

துறைமுக பாதுகாப்பின் பொருட்டு விசேட குழு

கொழும்பு துறைமுகம் உள்ளடங்கலான அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் தன்னுடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (8) காலை நடைப்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது. ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். மேலும் ஆபத்தான சந்தர்பங்களில் முகங்கொடுக்க…

Read More

ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை – அமைச்சர் றிஷாத்!

– சுஐப் எம்.காசிம்  – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவைகளே என்றும், நாட்டை அகல பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து, அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முடக்குவதே எதிர்த்தரப்பினரின் நோக்கம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் பங்கேற்று, உரையாற்றிய…

Read More

தலங்கமவில் மற்றுமொரு குண்டு செயலிழப்பு

தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் குண்டொன்று வெடித்த இடத்தில் இருந்த மற்றுமொரு குண்டு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

Read More

நீண்ட நேரம் நோன்பு பிடிப்பது இந்த நாட்டு முஸ்லிம்கள் தான்?

இம்முறை ரமழான் மாதத்தில் டென்மார்க் மற்றும் சுவீடன் முஸ்லிம்கள் நீண்ட நேரம் நோன்பு நோற்பதோடு ஆர்ஜன்டீனா மற்றும் அவுஸ்திரேய மக்கள் குறைந்த காலம் நோன்பு பிடிக்கின்றனர். உலகெங்கும் நோன்பு பிடிப்பது தொடர்பான வரைபட தரவுகளின்படி டென்மார்க் முஸ்லிம்களின் நோன்பு நோற்கும் காலம் அதிகபட்சமாக 21 மணி நேரங்களாகும். அதேவேளை ஆர்ஜன்டீனாவில் குறைந்த நேரமாக 9 மணி மற்றும் 30 நிமிடங்கள் நோற்க வேண்டும். இந்த சர்வதேச வரைபட தரவுகளின்படி நீண்ட நேரம் நோன்பி பிடிக்கும் நாடுகளில் ஐஸ்லாந்து,…

Read More