சர்வதேச கிரிக்கெட் பேரவை விபரங்கள் வௌியிடப்பட்டன
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் கொடுத்த நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவில் 12 நடுவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 2015/2016 ம் ஆண்டு பருவகாலத்தில் இடம்பெற்ற அனைத்து வகையான ஆட்டங்களில் 95.6 வீதமான…
