Headlines

திருமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுவுள்ள இப்தார் நிகழ்வுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Read More

சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியாதிருந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் கடப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக ஆதரவளித்த சட்டத்தரணிகளுடன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை…

Read More

சலாவ பிரதேச கழிவுகளை அகற்ற 22 இலட்சம் ரூபா

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் பிரதேசத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வேண்டுகோளுக்கிணங்க மேல் மாகாண நிர்வாக திணைக்களத்தினால் குறித்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது. அதன்படி இத்திட்டத்திற்காக 22 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக பெகோ மற்றும் டிப்பர் வாகனங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு 50 டொன் கழிவுகள் அகற்றப்பட உள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது.

Read More

அரநாயக்கவில் மீட்கப்பட்ட உடற்பாகங்களால் சிக்கல்

அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்னும் கேகாலை பெரிய வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்பாகங்கள் வைத்தியசாலையில் பிரதே அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடற்பாகங்கள் பிரேத அறையில் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி டொக்டர் ரமேஷ் அழகியவன்ன கூறுகின்றார். இதன்காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியிலும் கடையடைப்பு

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கமை, 27ஆம் திகதி முதல் கண்டி நகரத்திலுள்ள சகல கடைகளிலும் கறுப்பு நிற கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளனர். அத்துடன், 29ஆம் திகதி சகல கடைகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஞானசாரரின் குரோதப் பேச்சு – பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு

பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு…

Read More

நாட்டிலுள்ள அனைவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் மின்சாரம்

நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுசெய்யப்படும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

Read More

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டையப் போகும் ஸ்கொட்­லாந்து

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வ­தற்கு அந்­நாட்டு மக்­கள் ஆத­ர­வ­ளித்­துள்ள நிலையில், பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெறு­வது தொடர்­பான இரண்­டா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரு­ம­ளவில் வாய்ப்­புள்­ள­தாக ஸ்கொட்­லாந்து முத­ல­மைச்சர் நிகோலா ஸ்ரேர்­ஜியொன் தெரி­வித்தார். ஸ்கொட்­லாந்தின் விருப்­பத்­திற்கு மாறாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளதால் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை அந்தப் பிராந்­தியம் நடத்­து­வது ஜன­நா­யக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்­றென அவர் வலி­யு­றுத்­தினார். இதன் பிர­காரம் ஸ்கொட்­லாந்து அர­சாங்கம் பிறி­தொரு சுதந்­திர வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான…

Read More

மூடிக்கிடக்கும் நுரைச்சோலை வீடுகள் மக்கள் பாவனைக்கு

-சுஐப் எம்.காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அம்பாறை, நுரைச்சோலையில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் வீடுகளை விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் இன்று (24/06/2016) தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் இன்று (24/06/2016) பங்கேற்றார். இப்தார் நிகழ்வுக்கு முன்னதாக சாய்ந்தமருது மீனவக் குடியிருப்புக்கு விஜயம் செய்து, அங்கு வாழ்ந்துவரும் மீனவர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும்…

Read More

சூடான் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி!

சூடானில் உயர்கல்வி கற்க விரும்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், மருந்தகவியல், பல்மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், நிர்வாகம், கணக்கியல், பொருளியல், உயிரியல், விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய கற்கைநெறிகள், இஸ்லாமிய சட்டம் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை பின்பற்ற முடியும். 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தங்களது சுயவிபரக்கோவையை 0112333563 என்ற தொலை நகலுக்கோ அல்லது overseashigherstudies@gmail.com என்ற ஈமெயிலுக்கோ உடன் அனுப்பிவைக்கவும். இந்த கற்கைநெறிகளுக்கான செலவு,…

Read More