Headlines

‘தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு’

-பாநூ கார்த்திகேசு – ‘தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்’ என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ‘தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில்…

Read More

கட்சித் தலைமையை விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்ற தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது  என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர  தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More

30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுப்போம்

உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியன்று நிறைவடையும். அந்த மன்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவெடுப்பேன் என்று மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி கேட்ட குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறுக்கு கேள்வியை எழுப்பிய எம்.பி, எதிர்வரும் 30ஆம் திகதியன்று நிறைவடையவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது…

Read More

உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி – மஹிந்த அணி திட்டவட்டம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை  எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது -21- இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.

Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் : விரைவில் நீதிமன்றத்திற்கு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டே குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் மீண்டும் கோரிக்கை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட…

Read More

இந்த வருடம் தேர்தல் இல்லை!

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (2) இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள காலஎல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என,…

Read More

ஓகஸ்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளமையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஓகஸ்ட் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படலாம் என, தெரிவிக்கப்படுகிறது.

Read More

நோன்பு மாத­த்தில், தேர்­தலை நடாத்­த­வேண்­டாம் – ஜனாதிபதி உத்தரவு

– A.R.A. பரீல் – தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட்…

Read More

இவ்வருடம் தேர்தல் இல்லை

தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்த முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய மீள்திருத்தப் பணிகள், இதுவரை முற்றுப்பெறாதிருப்பதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதென்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது என, கொழும்பில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் கூறினார்.   இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காக, ஒழுக்கமின்றி நடந்துகொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான…

Read More

மீளவும் விண்ணப்பங்கள் கோரும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு  தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

Read More

ஜூனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடைபெறும்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது. இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்­போ­டப்­ப­ட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள…

Read More