Headlines

சஜின் வாஸின் வீடு சீஐடியினரால் சோதனை!

கொழும்பு, பொரளையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடுநேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. இதன்போது பணச்சலவை தொடர்பில் சீஐடியினர் பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். 2011,2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற அடிப்படையில் லஞ்சஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சஜின் வாஸினது வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

வெளிவிவகார கண்காணிப்புக்கான முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் கிஹான் பிலபிடிய அறிவித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன சார்பில் சட்டத்தரணி அனுர பிரேமரத்ன நீதிமன்றத்திடம் முன்வைத்த வேண்டுகோளை பரிசீலனை செய்த பின்னர் அவர் இந்த அறிவிப்பை நீதிபதியிடம் வெளியிட்டுள்ளார். தனது சொத்துக்கள் தொடர்பான கணக்கு விபரங்களை வெளியிடாமை குறித்து இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது….

Read More

சஜின் வாசுக்கு கொலை அச்சுறுத்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலப்பிட்டிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான சஜின் வாஸ் குணவர்தனவை காலி மே தினக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (30ம் திகதி) மாலை 6.15 அளவில் இடம்பெற்றுள்ளது. காலி கூட்டத்தில் பங்கேற்றால் கொலை செய்து விடுவதாக பெண் ஒருவர் சஜின்…

Read More