Headlines

விமானநிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்

விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் விமானநிலையத்தின் பாதுகாப்பும் இதன்மூலம் பலப்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குற்றங்கள் புரிந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் வசிக்கும்சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்வது இதன் மூலம்இலகுவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

சி.ஐ.டியில் திலின கமகே ஆஜர்

அனுமதிப்பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே, குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளார். திலின கமகே, இன்றைய தினம் (07) குற்றப்புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம்  விடுத்த உத்தரவின் பேரில் அவர் இன்று சி.ஐ.டியில் ஆஜரானார்.

Read More

சஜின் வாஸின் வீடு சீஐடியினரால் சோதனை!

கொழும்பு, பொரளையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடுநேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. இதன்போது பணச்சலவை தொடர்பில் சீஐடியினர் பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். 2011,2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற அடிப்படையில் லஞ்சஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

போக்­கு­வ­ரத்து பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் நாலரை மணி நேரம் சி.ஐ.டி. சிறப்பு விசா­ரணை

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பான விவ­கா­ரத்தில் நேற்று (4) போக்குவரத்து மற்றும் வீதிப் பாது­காப்புத் துறைக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசேட விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டார். அவ­ரிடம் நான்­க­ரை­ ம­ணி­நேரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் விக்கி­ர­ம­சே­கர தலை­மை­யி­லான குழு­வினர் சிறப்பு விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்து வாக்குமூலம் ஒன்­றினை பதிவுசெய்­து­கொண்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். பிரதிப்…

Read More

எம்.பி.க்கள் மூவரிடம் விசாரணை

நாடாளுமன்ற சபை அமர்வின் போது நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம், பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினாலேயே மேற்படி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்கவிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படவில்லை!– ஜனாதிபதி செயலாளர்

பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்… ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை பணி நீக்கவோ அல்லது விலக்கவோ இல்லை. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டாக காணப்பட்டது. ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு…

Read More

சிசிலியாவின் தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கோல்டன் கீ நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை நேற்று (25) சீஐடிக்கு பிறப்பித்தார். கோல்டன் கீ வழக்கில் வாடிக்கையாளர்களின் 4.3 மில்லியன் சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டே சிசிலியா மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிசிலியாவின் தங்க நகைகளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் வைப்புக்களை மீளச்செலுத்தமுடியுமா? என்பது குறித்து ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், நேற்று நீதிமன்றத்தில்…

Read More

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (25) உத்தரவிட்டுள்ளார். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை மார்ச் முதலாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Read More

இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்

கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார்…

Read More

தாஜுதீன் தீர்ப்பு இன்று..

யோஷித்த ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான CSN தொலைக்காட்சியில் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய, அவரது முன்னாள் காதலி என அறியப்படும் யஷாரா அபேநாயக்கா நிதி மோசடி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை அளித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினமே குறுஞ்செய்தியொன்றின் (SMS) மூலம் யஷாரா நடந்த விடயங்களை நாமல் ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவில் தான் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்ததாகவும், அவர்கள் CSN பணிப்பாளர்களை விசாரணைக்கு அழைப்பார்கள் என்றும், அனைவருக்கும் உள்ளே செல்வதற்கு தயாராக இருக்கும்படியும்…

Read More

சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். சியாம் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பின் பின்னர் சியாமின் தந்தை ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நீதிமன்றின் தீர்ப்பினை அவமரியாதை செய்யும் வகையில் சியாமின் தந்தை கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக…

Read More

பொதுபல சேனாவிற்கும் ஐ.எஸ்.களுக்கும் தொடர்பு கிடையாது: புலனாய்வுப் பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More