Headlines

மின்னல் தாக்கி நான்கு யானைகள் பலி

அநுராதபுரம், மஹாவிளாச்சி பகுதியில், மின்னல் தாக்கி யானைக்குட்டிகள் முன்று உட்பட நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த யானைகள் நான்கையும்  எள்ளுப் பயிற்செய்கை நிலத்திலிருந்து, கிராமவாசிகள் மீட்டுள்ளனர்.

Read More

மதில் விழுந்ததில் 16 மாணவர்கள் காயம்

லுணுகல முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Read More

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதி காலி – தர்மபால பூங்காவில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

இந்தியா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் 14ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த வழிபாட்டுத் தலமான சஞ்சிக்கே (Sanchi) அவர் செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் அந்தோனி டிசா மற்றும் பொலிஸ் துறையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இன்று அங்கு சென்று ஜனாதிபதியின் விஜயத்துக்கான ஏற்பாடுகளை கவனித்துள்ளதாக, அந் நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Read More

தோப்பூரில் மழை வேண்டித் தொழுகை

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணியளவில் மழை வேண்டி இறைவனிடத்தில் தொழும் இஸ்ராக் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. தோப்பூர் ஜம்மியத்துல் உலமா கிளையின் தலைவர் எம்.ஜரீத்(முப்தி) தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மத்ரஸா மாணவர்களும் பொது மக்களும் பங்குபற்றினர்.

Read More

அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்: நிமல்

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று ( நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாது இருக்க வேண்டுமாயின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

30 வருடங்களின் பின் மாட்டிக்கொண்ட மரண தண்டனை கைதி

மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 30 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஒருவரை கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இந்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பின்னர், இந்த நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்ததுடன், மீண்டும் நாடு திரும்பி புறக்கோட்டை…

Read More

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் இன்று பகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

கிராமசேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு.!

கிராமசேவை உத்தியோகத்தர்களினது காரியாலயக் கொடுப்பனவுகள் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கபடவுள்ளதாக உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஆணையிரவு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (7) நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More